Wednesday, September 6, 2006

போயி விவசாயத்தை பாருங்கய்யா.......

போனமுறை ஊர்பக்கம் போனாப்ப எங்கப்பத்தா கிராமத்து பக்கம் போயிட்டு வராலாமின்னு கூப்பிட்டுச்சு.அங்கெனே சிம்பிளா இருக்கிற மாதிரி காட்டனுமின்னு லீ ஜீன்ஸ்+ ரீபேக் ஷீ நம்ம படபொட்டி, தூக்கிட்டு திரியிற பொட்டி,ரேபான் கிளாஸ் சகிதமா கிளம்பினேன் பட்டிகாட்டுக்கு.

பஸ்'லே ஊருக்குள்ளே போறதுகுள்ளே பாதி உசுருபோச்சு, எப்பிடிதான் தினமும் இதிலே போயிட்டி வருதுகுலோ சனங்க எல்லாம். நாங்கலெல்லாம் பெங்களுருலே ஏசி காத்து'லெ போயிட்டு வர்றோம். அய்யோ அய்யோ.....

ஊருக்குள்ளே போயி இறங்கினவுடனே தடல்புடலா வரவேற்பானுங்கன்னு பார்த்தா ரெண்டு அரைடிக்கெட்டுக பக்கத்திலே வந்து பார்த்துட்டு ஹீம் பூச்சாண்டி இல்லயின்னு கன்பார்ம் பண்ணிட்டு போயிருச்சுக. அதுக்கப்புறமும் கண்ணாடி போட்டுக்கிட்டு தானே நடந்தேன். காடுகரையே காட்டுறேன்னு காச்சுபோன கட்டதரையை காட்டதானே என்னை இழுத்துட்டு வந்தியா நீயீ, ஏலெய் செவனைன்னு வாடா இன்னும் கொஞ்சம் தூரந்தான் நம்ம காடுகரை,நடநட நடந்து கடைசிய தோட்டவீட்டுக்கு கூட்டிட்டு போச்சு அப்புத்தா, அய்யோயோ அந்த வீட்டுலபெருசு ஓன்னு கெடக்கு, எங்க வீட்டுக்கு வந்தாலே நொணநொண்ணு கேள்வி கேக்கும் என்னா கேட்கபோகுதோ.... நினைச்சுக்கிட்டு போன மாதிரியே நோண்ட ஆரம்பிருச்சு.

"என்னப்பே என்னா வேலை பார்க்கிறே பெங்களூருலே...?"

"நானு கம்பியூட்டர் இஞ்சினியர்..! "

"அதிலே என்னா வேலை பார்க்கீறே..? "

"என்னா வேலைன்னா எதுமாதிரின்னு கேட்கிறீங்களா..?"

"ஆமாப்பே "

"நானு சிஸ்டம் அட்மினிஸ்டேரர்...!"

"என்னப்பே என்னா சொன்னே இங்கிலிபிஸ்ல சொல்லு "

"நானு கணினி நிர்வாகி "

"அப்பிடின்னா என்னாதான் உனக்கு வேலை "

என்னாத்தா சொல்ல அதுக்கிட்டே............ கம்ப்யூட்டர்,ரவுட்டரு,சுவிச்சுன்னு மெயிடென் பண்ணறே வேலை அதுஇதுன்னு கொஞ்சம் விளக்க வச்சேன்.

"சரிசரி விடு ஒரே வார்த்தைலை சொல்லுனுமின்ன கழுதை மேய்கீறே..?"

"ஏய் பெருசு என்னா கிராமத்துகுத்தல்னா இதுதானா ஆமா கழுதைதான் மேய்க்கீறேன் அதுவும் கம்ப்யூட்டர் கழுதைக அதுக்கு இப்போ என்னாங்குறே...?"

"ஆங் எம்புட்டு ஓவா வாங்குறே அதுக்கு கூலியா..?"

"கழுதை மேய்க்குறவன் வாங்குறதோட கொஞ்சுண்டு அதிகமாதான் நான் வாங்குறேன்...!"

அதுக்குப்புறம் அது கேட்ட பலகேள்விகளுக்கு நான் எதுவுமே பதிலே பேசலே.முக்கியமா கம்பிட்டர் படிச்சவே பூரா பயலுகளும் முட்டாபசங்கன்னு சொல்லி மடக்கப் பார்த்துச்சு...எங்கப்பா எதுக்கடுத்தாலும் நாங்கல்லாம் அந்த காலத்திலே எம்புட்டு கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம் நீங்க இப்பிடி சொகுசு வாழ்க்கையா இருக்கும்போதே எண்பதிரண்டு நொட்டைசொல்லுன்னு நீட்டிமுழங்குவாரு. நாமெல்லும் அந்த கஷ்டமான வாழ்க்கையின்னா என்னான்னு பார்க்கலாம் வந்தா இதுகதான் இங்க கஷ்டங்களா.

என்னப்பத்தா நீங்க வாழ்ந்த வீடெல்லாம் காட்டுறேன்னு சொல்லி கூட்டியாந்தே, இம்சையே தான் கூட்டிவச்சிருக்கே, டேய் நீ நிக்கிறது நம்ம மண்ணுடா,ஆனா இதுக்கு முன்னாடி இது பூராவும் பொட்டகாடா கிடைத்துச்சு, உங்கப்பன்சித்தப்பனுங்க தான் வந்து இதையெல்லாம் மண்ணையெல்லாம் தட்டிவிட்டு கிணறு வெட்டி நாலுபக்கமும் மரங்கொடியெல்லாம் நட்டு விட்டானுங்க. நமக்கு எம்புட்டு நிலமிருக்குன்னு சர்வே பண்ணி திருமங்கலத்திலே சர்க்கார் ஆபிஸ்ல பதிச்சு வச்சிருக்கானுவே அவிய்ங்களுக்கு அடுத்து நீதான் அம்புட்டுக்கும் கையெழுத்து போடபோற வாரிசுன்னு சொன்னிச்சு. அய்யோ ஒங்க கொடுமை தாங்க முடியலயே, இதை எல்லாத்தையும் வித்தாலும் அஞ்சுடிஜிட் அமவுண்ட் காசு வராது, வேற எதாவது பொன்னு காசுன்னு சேர்ந்திருந்தா கூட தூக்கிட்டாச்சிம் போகலாம், இத வச்சி என்னா பண்ணமுடியும்.

சரி கிளம்புற நேரத்திலேயாவது நம்ம சேட்டையே பெருசுக்கிட்டே காட்டாலமின்னு பெருசு நாப்பது மொழம் கவுறு வாங்கியாரேன், இந்த நிலபுலத்தெயல்லாம் கட்டி மதுரைக்குள்ளே நம்மை வீட்டு பக்கம் கொண்டாந்து விட்டுறு, நான் அங்கேனே சேல்ஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். ஒரு மொறை மொறைச்சு பார்த்து வாயை திறந்துச்சு, அப்புறமா எனக்கு காதும் கேட்கலை, அது இருக்கிற பக்கத்திலே கண்ணும் சரியா தெரியலே.

இந்த ஊருல எங்கப்பாரு என்னா கஷ்டப்பட்டாருன்னு கடைசிவரைக்கும் தெரியலே. எனக்கு நல்லாதான் குட்டிசாத்தான் அலறிச்சு, தூக்கிட்டுதிரியறிதிலே ஓயீபீ கனக்ட் ஆச்சு. எனக்கு தெரிஞ்சு அங்கனே கஷ்டமின்னா சும்மா தொணதொணன்னு பேசிக்கிட்டே இருந்தானுவே, ஒரு பய வீட்டுலேயும் ஏசி மெசினே காணோம், ஊரை சுத்தி மரமா இருத்துச்சு, சும்மா சும்மா ஜில்லுன்னு காத்து வேற அடிச்சிக்கிட்டே இருந்துச்சு.இங்க வேலையிலிருந்து பத்தி விட்டாங்கனா விவசாயம் பார்க்கப்போறேன் ஏன்னா அதுவும் சும்மா உட்கார்த்திருக்க வேலைதானே.

அதுக்கு முன்னாடி அந்த பெருசை போட்டு தள்ளிட்டுதான் ஊருக்குள்ளே போகணும்.

17 comments:

said...

//ரெண்டு அரைடிக்கெட்டுக பக்கத்திலே வந்து பார்த்துட்டு ஹீம் பூச்சாண்டி இல்லயின்னு கன்பார்ம் பண்ணிட்டு போயிருச்சுக//

:))

நல்லாயிருக்கு ராம்!

said...

கிராமத்தில் கிடைக்கும் தூயகாற்றும், கிராம மனிதர்களின் நக்கல்பேச்சும் எப்பொழுதும் சுகமானது. அதை பற்றி அனுபவ வார்த்தைகளாக கொடுத்து உள்ளிர்கள்.பாரட்டுக்கள் ராம்.

உண்மையாகவே கிராமத்தில் இணைய இணைப்பு கிடைக்கிறதா.

said...

//நானு கம்பியூட்டர் இஞ்சினியர்ன்னு பதில் சொன்னேன், அதுதானே தெரியுமில்லே உன்னோட மொகரகட்டையே பார்த்தலே தெரியுது அதிலே என்னா வேலை பார்க்கீறேன்னு திரும்ப கேட்டுச்சு அந்த லொள்ளூபெருசு. என்னா வேலைன்னா எதுமாதிரின்னு கேட்கிறீங்களான்னு நான் சிஸ்டம் அட்மினிஸ்டேரன்னு சோன்னேன். என்னப்பே என்னா சொன்னே இங்கிலிபிஸ்ல சொல்லுன்னு சொன்னுச்சு இம்சபெருசு//

இந்த தொல்ல தான் தாங்க முடியாது ராம்... கம்ப்யூட்டர்ல என்ன பண்ணுவீங்க???

இவுங்களுக்கு எல்லாம் வெளக்கம் சொல்லியே....

said...

சோக்கா பேரு வச்சான்யா ஒனக்கு கைப்புள்ளன்னு ஒரு தீர்க்கதரிசி -'ராயல் ராம்சாமி'ன்னு

//நமக்கு எம்புட்டு நிலமிருக்குன்னு சர்வே பண்ணி திருமங்கலத்திலே சர்க்கார் ஆபிஸ்ல பதிச்சு வச்சிருக்கானுவே அவிய்ங்களுக்கு அடுத்து நீதான் அம்புட்டுக்கும் கையெழுத்து போடபோற வாரிசுன்னு சொன்னிச்சு//

இப்பத் தானே தெரியுது நஞ்சை புஞ்சைன்னு ஏகத்துக்குச் சொத்து வச்சிருக்கிற ஜமீந்தாரு நீயின்னு. கூடக்கோவில் ஜமீன்தார் அண்ணன் ராயல் ராம்சாமி வாழ்க வாழ்க.
:)

said...

கைப்புள்ள said,
// கூடக்கோவில் ஜமீன்தார் அண்ணன் ராயல் ராம்சாமி வாழ்க வாழ்க. //

வாழ்க!! வாழ்க!!!

said...

//போயி விவசாயத்தை பாருங்கய்யா.......//
என்ன வெச்சு யாரும் காமெடு கீமெடி பண்ணலையே?

said...

ஹல்லோ மிஸ்டர் அனானி மாமு,

நீயி எனக்கு எழுத தெரியலேன்னு சொல்லிருக்கே.. நீ வந்து சொன்னது அப்புறந்தான் பதிவே முழுசா படிச்சு பார்த்தேன், சரியாதான் சொல்லிருக்கே,

அது அப்போ Non-Edit, இப்போ வந்து சொல்லுப்பே நான் ஏத்துக்கிறேன் உண்மையே எனக்கு எழுதவே தெரியாதுன்னு....!

அடுத்த தடவை பின்னூட்டம் போடறப்பே தைரியமா உன்னோட பேரையும் சேர்த்துபோடு.

said...

//நல்லாயிருக்கு ராம்! //

வாப்பா கப்பி, நான் பூச்சாண்டி இல்லேங்கிறதானே நல்லா இருக்குன்னு சொல்லுறே...!

said...

//கிராமத்தில் கிடைக்கும் தூயகாற்றும், கிராம மனிதர்களின் நக்கல்பேச்சும் எப்பொழுதும் சுகமானது. அதை பற்றி அனுபவ வார்த்தைகளாக கொடுத்து உள்ளிர்கள்.பாரட்டுக்கள் ராம்.//

நீங்க ஒருத்தரு மட்டுதாங்க நல்லவரு...... :-)))

//உண்மையாகவே கிராமத்தில் இணைய இணைப்பு கிடைக்கிறதா. //

கிடைக்கிறது... ஆனா அதோட பில்லுதான் தாளிச்சிருச்சு....:-)

said...

//முக்கியமா கம்பிட்டர் படிச்சவே பூரா பயலுகளும் முட்டாபசங்கன்னு சொல்லி மடக்கப் பார்த்துச்சு...//

எல்லாரும் அந்த நெனப்புலதான் இருக்காங்க! கம்பிட்டர்னு சொன்னா விட வேண்டியதுதான! நோண்டி நொங்கெடுத்து கடைசில நொட்டம் சொல்றதுதான் இந்த பெருசுகளோட வேலையே!

நல்லா எழுதியிருக்கிங்க ராம்!!

said...

//இந்த தொல்ல தான் தாங்க முடியாது ராம்... கம்ப்யூட்டர்ல என்ன பண்ணுவீங்க??? //


வாங்க பாலாஜி,

கம்பியூட்டரை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன். ஆனா ஒன்னுமே பண்ணவே மாட்டேன்..... :-))))

//இவுங்களுக்கு எல்லாம் வெளக்கம் சொல்லியே.... //

உண்மைதான் அதுக்கிட்டே இருந்து தப்பிக்கிறதுக்குள்ளே பாதி உசுரு போயிருச்சு..... :-)

said...

//சோக்கா பேரு வச்சான்யா ஒனக்கு கைப்புள்ளன்னு ஒரு தீர்க்கதரிசி -'ராயல் ராம்சாமி'ன்னு //

வா தல,

இன்று முதல் நீ பின்னால் நடக்கும் விசயங்களை முன்னரே அறிவிக்கும்
"முன்காட்டி" என அழைக்கப்படுவாய்...


//இப்பத் தானே தெரியுது நஞ்சை புஞ்சைன்னு ஏகத்துக்குச் சொத்து வச்சிருக்கிற ஜமீந்தாரு நீயின்னு. கூடக்கோவில் ஜமீன்தார் அண்ணன் ராயல் ராம்சாமி வாழ்க வாழ்க.//

எங்கூரு ஜமிந்தாரு இதே பார்த்தோலோ கேட்டோலோ அழுதுருவாரு...... :-)))

said...

//வாழ்க!! வாழ்க!!! //


வாங்க வித்யா,

நீங்களுமா தல கூட சேர்ந்துக்கிட்டு என்னை ஓட்டுவீங்க...... :-)))))

said...

//என்ன வெச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலையே? //

இல்ல விவசாயி இப்போதைக்கு பண்ணலே....

மதுர(கூடக்கோவில் கிளை) டிராக்டர் சங்கம் சார்பாக நன்றிகளை நவில்கிறோம் உங்கள் வருகைக்கு.....

said...

//எல்லாரும் அந்த நெனப்புலதான் இருக்காங்க! கம்பிட்டர்னு சொன்னா விட வேண்டியதுதான! நோண்டி நொங்கெடுத்து கடைசில நொட்டம் சொல்றதுதான் இந்த பெருசுகளோட வேலையே!//

வாங்க கதிர்... உங்களுக்கும் இதிலே அனுபவம் இருக்கா என்னா.... :-)கொஞ்சம் ரெண்டே எடுத்து விடுங்க....

//நல்லா எழுதியிருக்கிங்க ராம்!! //

டாங்கீஸ்ப்பா....

said...

அப்பா அனானிகளா போதும் பாரட்டுனாதெல்லாம், தாங்கலை சாமிகளா உங்க கொட்டம்......

இதுக்கெல்லாம் நான் அசருவேன் பார்த்திங்களா.... ஏலேய் மதுரை மண்ணுலே எதுக்கும் பயப்பட மாட்டேமில்லேய்.....

நீங்க விளையாட சீக்கிரமே ஒரு பதிவு போடுறேன், வந்து விளையாடுங்க, அப்புறம் அக்கரைசிரிப்புக்கு நன்றிலேய்.

said...

போடி போ பிடிக்கலைன்னா என்னா ....க்கு வர்றே இங்க நீயீ. உன்னையே வெத்திலேபாக்கு கொடுத்து வரவேற்றனா..

சென்னைலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறே அது மட்டும் தெரியுது.

இத படிச்சிட்டிவாது கொஞ்சமாவது திருந்தித்தொலைங்கடோய் .