Tuesday, January 16, 2007

ஜல்லிப் பதிவு

ஹீம் இன்னிக்கு நம்ம பொங்கல் அதுவுமா இங்கே பொட்டி தட்டுறே வேலைக்கு வந்தாச்சு, சரி பண்டிகை அதுவுமா வந்துருக்கோமே கொஞ்சம் நிம்மதியா இருக்கலாமின்னு பார்த்தா வேலை வேலைன்னு அதே ஆணியே இன்னிக்கும் பிடுங்க விட்டானுக. இன்னிக்கு எவ்வளோ பெரிய நாளு அதுவும் நம்மளுக்கு சோறு போடுறே விவசாயிக்கு உதவியா இருக்கிற ஜிவராசிக்கு நன்றி சொல்லுற நாளு. அதுகளுக்கு குளிப்பாட்டி நல்லா சிங்காரிச்சு கலரு பெயிண்ட்ல்லாம் கொம்புலே அடிச்சு பார்க்கவே களையா இருக்குங்க. இந்த நாளிலே அதையெல்லாம் நேரடியா கண்ணாலே கண்டு ரசிக்க முடியாமே பண்ணின எங்க டேமேஜருக்கு கண்டனங்கள் சொல்லி இங்கே ஜல்லியடிச்சுக்கிறேன்.


கிழே இருக்கிற படங்கள் இந்த இடத்திலிருந்து சுட்டது.





33 comments:

said...

அதுசரீ, இப்படியெல்லாமா சுட்டு ஜல்லி அடிக்கிறது.ஜல்லி அடிக்கிறேன்னு ஜல்லிக்கட்டுல்ல அடிச்சு போட்டு இருக்கீரு.


2வது படத்துல மாட்டுக்கு பின்னாடி, அண்டிராயர் தெரிய பம்முறது யாரு? ராம் மாதிரியே தெரியுது..

இளா

said...

//அதுசரீ, இப்படியெல்லாமா சுட்டு ஜல்லி அடிக்கிறது.ஜல்லி அடிக்கிறேன்னு ஜல்லிக்கட்டுல்ல அடிச்சு போட்டு இருக்கீரு.//

ஹி ஹி வாங்க விவசாயி,

நம்ம பிளாக்'கே புச்சா மாத்தினதுக்கபுறம் இன்னிக்குதான் பதிவே போடுறேன், அதுதான் கொஞ்சகாணு ஜல்லி.... :)


//2வது படத்துல மாட்டுக்கு பின்னாடி, அண்டிராயர் தெரிய பம்முறது யாரு? ராம் மாதிரியே தெரியுது..//

யாருக்கிட்டே இதெல்லாம், நாங்கல்லும் மாடு பிடிக்க போயிருக்கோமில்லே, அதே பத்தி நாளைக்கு பதிவு போடுறேன்.

said...

ஹிம்...
இப்படி விசேஷமன்னைக்கெல்லாம் கம்பெனி நடத்தி ஃபீல் பண்ண வைக்கறானுங்க.

போட்டோவெல்லாம் சூப்பரா இருக்கு :-)

said...

//நாங்கல்லும் மாடு பிடிக்க போயிருக்கோமில்லே//
தொரியுமே. மாடு வரத பார்க்க பைனாகுலர் கொண்டு போவீங்களாமே, சங்கத்துல சொல்லிக்கிட்டாங்க

said...

இராயல் (எ) ராயல்,

//டேமேஜருக்கு கண்டனங்கள் //

நொண்டி மாட்டை வச்சு இவனுங்களை முட்ட விடலாமா? ;))

//யாருக்கிட்டே இதெல்லாம், நாங்கல்லும் மாடு பிடிக்க போயிருக்கோமில்லே, அதே பத்தி நாளைக்கு பதிவு போடுறேன்//

காட்டுல அதுபாட்டுக்கு மேய்ஞ்சுட்டிருந்த பசு மாட்டை மாடு பிடிக்கறேன்னு தொரத்தி அடிவயித்துல அடிவாங்கினது நீங்க தானா? :))

போட்டோவெல்லாம் சூப்பரா இருக்கு...சுட்ட இடத்துக்கு சுட்டி கொடுத்ததுக்கு நன்றி :)

said...

படங்கள் நேர்த்தியாக இருக்கிறது ராம் !

பொங்கல் வாழ்த்துக்கள் !

said...

சரியாத்தான் பேரு வெச்சு இருக்கீங்க ஜல்லிப் பதிவுன்னு. :))

said...

சுட்டாலும் சூப்பரா தான் சுட்டு இருக்கீங்க. படங்கள் அருமை இராம். ஊரு நியாபகம் வந்தாச்சு.

:)

said...

ராமு....இதென்னது....ஜல்லிப் பதிவா? ஜல்லிக்கட்டு பதிவா? ஓரத்துல ஒதுங்கி பதுங்கி பம்மி நின்னு எடுத்த போட்டோ இல்லைல்ல இது. யாரோ எடுத்ததுதானே? ;-)

said...

///டேமேஜருக்கு கண்டனங்கள் சொல்லி இங்கே ஜல்லியடிச்சுக்கிறேன்///

:))))))))))

said...

/////டேமேஜருக்கு கண்டனங்கள் சொல்லி இங்கே ஜல்லியடிச்சுக்கிறேன்///

:)))))))))) //

ரிபீட்டே... :-)))))))))))

said...

இதுதான் அக்மார்க் ஜல்லிப்பதிவு!!

ராயல் ரைட்ஸ் வாங்கிடுங்க!

said...

ராயலு ராயலு நீ பெருமையுள்ள ராயலு...

தம்பி ராயலு!

டேமேஜருக்கு எனது கண்டனங்கள்.

பேச்சிய அடக்க கிளம்புன உன்ன அந்த டேமேஜரு பொட்டிய தட்ட விட்டுட்டான். அதுக்காக என்னோட படத்துல அவனுக்கு ஒரு ரோல் குடுத்து பழிவாங்கிடலாம்.

said...

//ஹிம்...
இப்படி விசேஷமன்னைக்கெல்லாம் கம்பெனி நடத்தி ஃபீல் பண்ண வைக்கறானுங்க. //

வாப்பா பாலாஜி,

என்ன பண்ணறது, இன்னும் கொஞ்சநாளுலே அப்ரைசல் வேறே வருது, அதுக்காகவே அமைதியா போக வேண்டியதா இருக்கு :)

//போட்டோவெல்லாம் சூப்பரா இருக்கு :-) //

ஹி ஹி ஒருத்தன் மெயில்லே அனுப்புனான், அதிலே இருக்கிற லிங்கை பிடிச்சு மிச்ச படத்தை எடுத்தேன்.
:)

said...

//நொண்டி மாட்டை வச்சு இவனுங்களை முட்ட விடலாமா? ;))//

வாப்பா கப்பி நிலவா,

நொண்டி மாட்டுக்கிட்டே முட்டு வாங்க இன்னோருத்தர் இருக்காருல்லே.... :)


//காட்டுல அதுபாட்டுக்கு மேய்ஞ்சுட்டிருந்த பசு மாட்டை மாடு பிடிக்கறேன்னு தொரத்தி அடிவயித்துல அடிவாங்கினது நீங்க தானா? :))//

அடபாவி இப்பிடி கவுத்திட்டியே :(

//போட்டோவெல்லாம் சூப்பரா இருக்கு...சுட்ட இடத்துக்கு சுட்டி கொடுத்ததுக்கு நன்றி :) //

டாங்கீஸ் :)

said...

/படங்கள் நேர்த்தியாக இருக்கிறது ராம் !

பொங்கல் வாழ்த்துக்கள் ! //

வாங்க கோவியாரே,

ரொம்ப நாள் பிறகு வந்திருக்கீங்க....

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

said...

//சரியாத்தான் பேரு வெச்சு இருக்கீங்க ஜல்லிப் பதிவுன்னு. :)) //

வாங்க கொத்ஸ்,

எல்லாரும் பீட்டாவுக்கு மாத்தினாப்புறம் சோதனைப் பதிவு போடுறமாதிரி நான் ஜல்லிப்பதிவுன்னு போட்டேன். :)

said...

//சுட்டாலும் சூப்பரா தான் சுட்டு இருக்கீங்க. படங்கள் அருமை இராம். ஊரு நியாபகம் வந்தாச்சு. //

வாங்க ஸ்ரீகாந்த்,

நான் சுட்ட போட்டோவே விட நீங்க உங்க பொட்டிலே சுடுற போட்டோ எல்லாம் சூப்பரா இருக்குமில்லே.... :)

ம் சீக்கிரம் ஊர் பக்கம் வந்து அதையும் பொட்டிலே புடிச்சு போடுங்க... :)

said...

//ராமு....இதென்னது....ஜல்லிப் பதிவா? ஜல்லிக்கட்டு பதிவா? ஓரத்துல ஒதுங்கி பதுங்கி பம்மி நின்னு எடுத்த போட்டோ இல்லைல்ல இது. யாரோ எடுத்ததுதானே? ;-) //

வாங்க ஜிரா,

ஜல்லிக்கட்டு படப்பதிவுன்னு சொல்லிட்டு என்னோட ஜல்லிப்பதிவு....

ஹிஹி ஹவ் இஸ் மை சாமாளிபிகேஷன். :)

said...

ரவி ஏன் இப்பிடி பெரிய சிரிப்பானு????

//ரிபீட்டே... :-))))))))))) //

வாங்க பாலா,

மொத தடவை நம்ம பக்கம் வந்திருக்கீங்க....... நன்றி

said...

//இதுதான் அக்மார்க் ஜல்லிப்பதிவு!!

ராயல் ரைட்ஸ் வாங்கிடுங்க! //

ரொம்ப டாங்கீஸ் கதிரு,

ரைட்ஸ் வாங்க எங்கே அப்ளை பண்ணனுப்பா???

said...

//ராயலு ராயலு நீ பெருமையுள்ள ராயலு...

தம்பி ராயலு!

டேமேஜருக்கு எனது கண்டனங்கள்.

பேச்சிய அடக்க கிளம்புன உன்ன அந்த டேமேஜரு பொட்டிய தட்ட விட்டுட்டான். அதுக்காக என்னோட படத்துல அவனுக்கு ஒரு ரோல் குடுத்து பழிவாங்கிடலாம். //

அட பாவமே டவுசரும் இங்கே வந்து கமெண்ட் போட்டுருக்காப்பலே.... ஹிம் உங்கப்படத்தையெல்லாம் நாங்க பார்த்ததே ஏதோ பழி பாவத்திலேதான், அதிலே எங்க டேமேஜருக்கு ரோல் வேறயா???? :)

said...

thanks for introducing such a nice site - அதாம்பா, ஒச்சப்பன் போட்டோ ப்ளாக் சொல்றேன்..

said...

belated புத்தாண்டு வாழ்த்துக்கள் ராயலு :-)

said...

//2வது படத்துல மாட்டுக்கு பின்னாடி, அண்டிராயர் தெரிய பம்முறது யாரு? ராம் மாதிரியே தெரியுது..
//

@இளா, இப்படி வெளில சொல்லலாமா :-)

said...

ஹாய் ராம்,

பட்சங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. ஆனா இந்த ஜல்லி கட்டுல போயி ஏன் இந்த மக்கள்லாம் உடம்பை இப்படி காயப் படுத்திக்கிறார்களோ?

அப்பரமா நான் கூட 8 வருஷத்துக்கு முன்னாடி மதுரைக்கு போயிருக்கேன். அப்ப ஆரிய பவன் தான் பேமஸ். கோவிலை சுத்தி சில ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கேன்.நைட்டு கூட நல்ல டிபன் கிடைக்கும். அது வாஸ்தவம் தான். எனக்கு கூட இந்த ஊரில வெல்ல சாம்பாரு பிடிக்காது.எல்லாத்திலயுமே ஒரு வெல்லம் தான்.இந்த ஊரு ருசி அப்பிடி.

said...

//thanks for introducing such a nice site - அதாம்பா, ஒச்சப்பன் போட்டோ ப்ளாக் சொல்றேன்.. //

வாங்க தருமி ஐயா,

ரொம்ப டாங்கீஸ், அந்த சைட்டுக்கு ஏன் ஒச்சப்பன்னு பேரு வைச்சேன்னு அந்த வெள்ளக்கார தொரை சொல்லிருக்காரு படிச்சு பார்த்தீங்களா??? :)

said...

//belated புத்தாண்டு வாழ்த்துக்கள் ராயலு :-) //

12B,

வாங்க வெகசனெல்லாம் எப்பிடியிருந்துச்சு,

ஜனவரி கடைசி வரைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லாலமே அதுக்கு எதுக்கு Belated'ல்லாம்??

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், முடிந்துப் போன பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் :)

//@இளா, இப்படி வெளில சொல்லலாமா :-) //

12B என்ன அநியாயம் இது, நானே விவ் போட்ட கமெண்டே யாரும் பார்க்ககூடாதுன்னு இருந்தா அதே Tag எடுத்து வேறே காட்டுறீங்க???? :(

said...

//ஹாய் ராம்,

பட்சங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. ஆனா இந்த ஜல்லி கட்டுல போயி ஏன் இந்த மக்கள்லாம் உடம்பை இப்படி காயப் படுத்திக்கிறார்களோ?//

சுமதி,

மிக்க நன்றி முதன் வருகைக்கு, உடம்பு காயமா, அது நம்ம தமிழர் வீரத்தை உலகத்துக்கு எடுத்து சொல்லுற விளையாட்டுங்க.:)

//அப்பரமா நான் கூட 8 வருஷத்துக்கு முன்னாடி மதுரைக்கு போயிருக்கேன். அப்ப ஆரிய பவன் தான் பேமஸ். கோவிலை சுத்தி சில ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கேன்.நைட்டு கூட நல்ல டிபன் கிடைக்கும். அது வாஸ்தவம் தான். //


இன்னும் மதுரையிலே நிறைய இடம் இருக்குங்க, மதுரை சாப்பாட்டை பத்தி நான் எழுதின ரெண்டு பதிவிலே ஒன்னு இது ரெண்டாவது

ஹி ஹி நமக்கு விளம்பரமே ஆவாது :)

//எனக்கு கூட இந்த ஊரில வெல்ல சாம்பாரு பிடிக்காது.எல்லாத்திலயுமே ஒரு வெல்லம் தான்.இந்த ஊரு ருசி அப்பிடி. //

நீங்களும் பெங்களூரூதானே...

said...

ஆஹா! ஆஃபீஸ்ல ஒக்காந்து அசை போட்டா, அது பேரு ஜல்லியா?

ஆமா, இந்த ஜல்லி அடிக்கறதுன்றாங்களே, அப்படீன்னா என்னன்னு ஒரு பதிவு போடுங்க சாமி!

பொங்கல் வாழ்த்துகள்!

:)

said...

இந்த படத்தை எங்கே பார்த்த மாதிரி இருக்கின்றது.ஜொள்ளுப் பாண்டி சுட்ட படமும் இதேதான்.ஹா ஹா...

said...

//ஆஹா! ஆஃபீஸ்ல ஒக்காந்து அசை போட்டா, அது பேரு ஜல்லியா?

ஆமா, இந்த ஜல்லி அடிக்கறதுன்றாங்களே, அப்படீன்னா என்னன்னு ஒரு பதிவு போடுங்க சாமி!

பொங்கல் வாழ்த்துகள்!//

sk ,

ஆபிஸிலே அசை போடுறதா ... அப்போ நாமெல்லாம் மாடுகளா???

அது சரி மாடு மாதிரி உழைக்கிறோமில்லை... :)

அடுத்த பதிவுக்கு நீங்களே ஐடியா சொல்லிட்டிங்க :P

said...

//இந்த படத்தை எங்கே பார்த்த மாதிரி இருக்கின்றது.ஜொள்ளுப் பாண்டி சுட்ட படமும் இதேதான்.ஹா ஹா...//

வாங்க துர்கா, முதன்முறை வருகைன்னு நினைக்கிறேன், அவ்வரவு நல்வரவாக ....

நானும் பாண்டியண்ணனும் ஒரே இடத்திலேதான் சுட்டு பதிவு் போட்டோம் :)