Friday, March 23, 2007

"When I was in US..."

"The United States of America is a country of the western hemisphere, comprising fifty states and several territories. Forty-eight contiguous states lie in central North America between the Pacific and Atlantic Oceans, bound on land by Canada to the north and Mexico to the south; Alaska is in the northwest of the continent with Canada to its east, and Hawaii is in the mid-Pacific. The United States is a federal constitutional republic; Washington, its capital, is coextensive with the District of Columbia (D.C.), the federal capital district."


இதெல்லாம் நான் சொல்லலைப்பா, விக்கிபீடியா'லே இருக்கு.. இப்போ எதுக்குடா இதுன்னு கேட்கிறீங்களா? அப்போ கிழே இருக்கிறத படிச்சி பாருங்க...

நம்ம பசங்க அடிச்சு பிடிச்சு புதரகத்துக்கு போயிட்டு திரும்பி வந்ததுக்குப்புறம் அவனுக பண்ணுற அலப்பறை இருக்கே, ஐயோ சாமி அதெல்லாம் சொல்லி மாளாதுய்யா? என்னோமோ செவ்வாய்கிரகத்துக்கு ராக்கெட்'லே போயி அப்பிடியே அவங்க வீட்டுவாசலிலே இறங்கின கணக்கா பந்தா கட்டுவானுக. காலையிலே எந்திரிச்சு குளிக்கனுமிங்கிற பழக்கம் எல்லாம் போயி கிழிச்சு போன கோணி மாதிரி இருக்கிற ஜீன்ஸ் ஒன்னே போட்டுகிட்டு அமெரிக்கா'லே இது வாங்குனது'ன்னு காட்டுறதுக்காக சட்டைபிராண்ட் பேரை வெளியே தெரியுறமாதிரி இருக்கிற நாலு சட்டையை வாங்கிட்டு வந்துட்டு போட்டு திரிவாய்ங்கே. அதுக்குமேலே நாத்தமருந்து வேற அடிச்சு அவனையும் கடிக்கலாமின்னு வர்ற கொசுவெல்லாம் கொன்னு போட்டுப்பிடுவாய்ங்கே.

ஆரம்பகாலங்களிலே முக்குகடையிலே கொஞ்சகாணு தண்ணி வாங்கி குடிக்கவே அந்த கடைக்காரருக்கு ஐஸ் வைச்சிட்டு திரிஞ்ச பயலுக எல்லாம் அங்கிட்டு போயிட்டு வந்ததும் அந்த கடைக்காரருகிட்டே ஐஸ் மினரல் வாட்டருன்னு ஐநூறு நோட்டை எடுத்து காட்டுவானுக.

அதே கடையிலே எட்டணா கொடுத்து ரெண்டு தேன்முட்டாயி வாங்கினதெல்லாம் மறந்துட்டு "கெட் மீ கேண்டி"ன்னு கேட்கிற பயலுக நாக்கை இழுந்து பிடிச்சு அறுக்கத்தான் தோணும்.நம்மளை பின்னாடியே வர்ற மணிநாயிக்கு 2ரூவா கொடுத்து டைகர் பிஸ்கட் வாங்கி போடலமின்னு நினைச்சா ஓ டாக்'க்கெல்லாம் ஏண்டா குக்கீஸ்'ல்லாம் போடுறீங்க?'ன்னு கேட்கறவங்களை ஏண்டா அமெரிக்கா பைபாஸ் ரோட்டிலே வச்சு லாரிகாரய்ங்கே தூக்காமே விட்டுயாங்கன்னு நாமே கடுப்போட கேட்டா அதிலேயும் அதுக்கு அவிய்ங்கே கொடுக்கிற நொணநாட்டிய பதிலு, "அங்கே நாங்கெல்லாம் பைபாஸ் ரோடு'ன்னு சொல்லமாட்டோம், Freeway'ன்னு தான் சொல்லுவோம்... :(

அடேய் அரைடவுசரு மண்டையங்களா நாலு மாசம் அமெரிக்கவிலே குப்பை கொட்டுனதுக்கே இம்பூட்டுடா, புஷ்'க்கு PA வேலை எதும் பார்த்துட்டு வந்துட்டா நம்ம பக்கத்திலே வர்றதுக்கு மோப்பநாயை விட்டு சோதனை பண்ணிப் பார்ப்பாய்ங்கே போலே!

சரி போதுமிடா வா இவனுக்கு நாலு பொரட்டா'வே வாங்கி கொடுத்து வீட்டுக்கு பத்திவிட்டுறனுமின்னு எப்பவும் போற ஹோட்டலிலே போனா அங்கேயும் வந்து ஆரம்பிச்சிறவனுக. நீங்க சமைக்கிறதுக்கு யூஸ் பண்ணிற ஆயில் ஃபேட் ஃபிரி'தானே'ன்னு விசாரிக்கிறதும், காசு கொடுக்கிறேன்னு சொல்லி பந்தாவா போயி கிரிட்டிட்கார்ட் அக்செப்ட் பண்ணுவீங்களா'ன்னு அவியங்கே பர்சிலே அடுக்கி வைச்சிக்கிற அஞ்சாறு அட்டைகளை எல்லாருக்கும் தெரியுனுமினும்கிறத காட்டிக்க கேட்கிறதும் நினைச்சு பார்த்தாலே இன்னும் நாலு அணுகுண்டுகளை போட்டு அவிய்ங்களை பூரா சிதைக்கனுமின்னுறே அளவுக்கு கோவம் வரும்!.

இம்புட்டு அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கும்போது மூச்சுக்கு முன்னூறு தடவை, "What a hell, i feel sultry ,அங்கே அடிக்கிற குளிருக்கு நாங்க எப்பவுமே ஜெர்கின் போட்டுதான் திரிவோமின்னு ஏகத்தாள பேச்சு வேறே? இதெல்லாம் தாண்டி பெரிய கொடுமை என்னான்னா தான் ஒரு ஃபாரின்ரிட்டன்'கிறத காட்டிக்கிறதுக்கு வந்து பத்து மாசமானலும் தூக்கிட்டு திரியுற பேக் எல்லாத்திலேயும் ஃபிளைட் டேக்'ஐ மாட்டிக்கிட்டு திரிவானுக.

டிஸ்கி #1:-

இந்த பதிவு கிழ்கண்ட யாரையுமோ இல்லே அவங்க போட்ட போஸ்ட்'க்கு எதிர்வினை இல்லைன்னு அடிச்சு சொல்லிக்கிறேன்.

தேன் சிறில்
வெயிலில் மழை ஜி
ஜாவா பாவலர்

டிஸ்கி #2:-

தலைப்புக்கு காரணம் அவிய்ங்கே இங்க வந்ததும் அடிக்கடி சொல்லுற வார்த்தை:)

70 comments:

said...

ராமு...

ர்ரொம்பத்தான் இம்சையாயிருக்கீங்க போல....

ஆமா டிஸ்கில யாரச்சொல்லீருக்கீக....நம்மளாண்ட மட்டும் தனியா சொல்லுங்கப்பு...தெரிஞ்சிக்கறம்.

said...

அடப்பாவிகளா... உள்குத்துக்காகவே இந்த டிஸ்கிய உருவாக்கியிருக்கீயளா??

said...

:-)

நான் முத தடவை இங்க ஒரு எட்டு மாசம் இருந்துட்டுத் திரும்பி நம்ம ஊருக்கு வந்தப்ப இந்த மாதிரி எல்லாம் அளப்பரை விடாததால 'டேய். நீ அமெரிக்காவுல தான் இருந்தியா? இல்லை சென்னையில தலைமறைவா இருந்துட்டு எங்க கிட்ட கதை விட்டியா'ன்னு கேட்ட மக்களைப் பத்தி என்ன சொல்றீங்க? :-)

இந்த கோக் குடிக்கிறதைப் பத்தி ஒன்னும் சொல்லலையே. எத்தனை பேரு என்னைக் கேட்டிருப்பாங்க 'என்னங்க நீங்க அமெரிக்காவுல இருந்து வந்திருக்கீங்கன்னு சொல்றாங்க. நீங்க என்னடான்னா பச்சத்தண்ணி குடிக்கிறீங்க. அந்தப் பக்கமெல்லாம் கோக் தான் குடிப்பாய்ங்களாமே'ன்னு வாட்டி எடுத்துட்டாங்க.

said...

ஜி சும்மா விட்டுட்டுப் போயிட்டார். இருங்க இருங்க வெட்டி, ஷ்யாம் அண்ணாகிட்ட எல்லாம் சொல்லி வைக்கறேன்.... :))))))))))))))

(மொறைக்கப்படாது. பெரிய ஸ்மைலி போட்டிருக்கோம்ல. உங்களை ஒழிக சொல்லி என் பதிவுல பின்னூட்டம் போட்டிருக்கேன்.போயி பாருங்க)

said...

//ராமு...

ர்ரொம்பத்தான் இம்சையாயிருக்கீங்க போல....//

வாங்க பங்க்ஸ்,

அவனுக பண்ணுற தொல்லைக இருக்கே! ஐயோ சாமி அதுக்காகவே இன்னும் இதேமாதிரி ரெண்டு மூணு மொக்கை பதிவு போடணும்...ஹி ஹி

//ஆமா டிஸ்கில யாரச்சொல்லீருக்கீக....நம்மளாண்ட மட்டும் தனியா சொல்லுங்கப்பு...தெரிஞ்சிக்கறம். //

என்னங்க அது அவங்களை சொல்லலை! சொல்லலை!!ன்னு தெளிவா சொல்லிருக்கேன்லே??
அப்புறம் எப்பிடி ஒங்களுக்கு சந்தேகம் வந்துச்சு ??? ;)

said...

//அடப்பாவிகளா... உள்குத்துக்காகவே இந்த டிஸ்கிய உருவாக்கியிருக்கீயளா?? //

வாலே ஜீயி,

அது உள்குத்தெல்லாம் இல்லைப்பா:)

said...

//நான் முத தடவை இங்க ஒரு எட்டு மாசம் இருந்துட்டுத் திரும்பி நம்ம ஊருக்கு வந்தப்ப இந்த மாதிரி எல்லாம் அளப்பரை விடாததால 'டேய். நீ அமெரிக்காவுல தான் இருந்தியா? இல்லை சென்னையில தலைமறைவா இருந்துட்டு எங்க கிட்ட கதை விட்டியா'ன்னு கேட்ட மக்களைப் பத்தி என்ன சொல்றீங்க? :-) //

வாங்க ததா,

அவங்க உண்மையை தாமே கேட்டுருகாங்க :)

//இந்த கோக் குடிக்கிறதைப் பத்தி ஒன்னும் சொல்லலையே. எத்தனை பேரு என்னைக் கேட்டிருப்பாங்க 'என்னங்க நீங்க அமெரிக்காவுல இருந்து வந்திருக்கீங்கன்னு சொல்றாங்க. நீங்க என்னடான்னா பச்சத்தண்ணி குடிக்கிறீங்க. அந்தப் பக்கமெல்லாம் கோக் தான் குடிப்பாய்ங்களாமே'ன்னு வாட்டி எடுத்துட்டாங்க. //

ஓ அது மிஸ்ஸாடுச்சு இல்லே... அடுத்து இன்னோரு போஸ்ட் போட்டுருவோம்:)))

said...

//
அதே கடையிலே எட்டணா கொடுத்து ரெண்டு தேன்முட்டாயி வாங்கினதெல்லாம் மறந்துட்டு "கெட் மீ கேண்டி"ன்னு கேட்கிற பயலுக நாக்கை இழுந்து பிடிச்சு அறுக்கத்தான் தோணும்.நம்மளை பின்னாடியே வர்ற மணிநாயிக்கு 2ரூவா கொடுத்து டகர் பிஸ்கட் வாங்கி போடலமின்னு நினைச்சா ஓ டாக்'கெல்லாம் ஏண்டா குக்கீஸ்'ல்லாம் போடுறீங்க?'ன்னு கேட்கறவங்களை ஏண்டா அமெரிக்கா பைபாஸ் ரோட்டிலே வச்சு லாரிகாரய்ங்கே தூக்கவிட்டுயாங்கன்னு நாமே கடுப்போட கேட்டா அதிலேயும் அதுக்கு அவிய்ங்கே கொடுக்கிற நொணநாட்டிய பதிலு, "அங்கே நாங்கெல்லாம் பைபாஸ் ரோடு'ன்னு சொல்லமாட்டோம், ஃப்ரிவே'ன்னு தான் சொல்லுவோம்.
//

Ada pavvi Royallu, enna kottomai ithu...


//
சரி போதுமிடா வா இவனுக்கு நாலு பொரட்டா'வே வாங்கி கொடுத்து வீட்டுக்கு பத்திவிட்டுறனுமின்னு எப்பவும் போற ஹோட்டலிலே போனா அங்கேயும் வந்து ஆரம்பிச்சிறவனுக. நீங்க சமைக்கிறதுக்கு யூஸ் பண்ணிற ஆயில் ஃபேட் ஃபிரி'தானே'ன்னு விசாரிக்கிறதும், காசு கொடுக்கிறேன்னு சொல்லி பந்தாவா போயி கிரிட்டிட்கார்ட் அக்செப்ட் பண்ணுவீங்களா'ன்னு அவியங்கே பர்சிலே அடுக்கி வைச்சிக்கிற அஞ்சாறு அட்டைகளை எல்லாருக்கும் தெரியுனுமினும்கிறத காட்டிக்க கேட்கிறதும் நினைச்சு பார்த்தாலே இன்னும் நாலு அணுகுண்டுகளை போட்டு அவிய்ங்களை பூரா சிதைக்கனுமின்னு அளவுக்கு கோவம் வரும்!.

//
Superpa...

said...

இந்த 'டிஸ்கி' இல்லாம படிச்சாகூட உண்மையதான் சொல்லுதீங்க..

/'டேய். நீ அமெரிக்காவுல தான் இருந்தியா?/
குமரன் சொல்லுறதும் உண்மைதான்... வெட்டி பந்தாவுக்குதான் இப்ப 'மவுசு' ஜாஸ்தி!

said...

Touseer Pondi Royallu,
Thanks for gave this tips...
It would be useful to me, and expecting some more and fresh Ideas...

said...

அப்புறம் செல்லம் உனக்கு ஒரு நாளைக்கு onsite offer வரும்ன்றத மறந்துட்டு பேசிக்கிட்டு இருக்கறப்பு :)))

said...

ROTFL...என்ன ராயலு பொங்கி எழுந்து இருக்கீக போல...சும்மாவா அப்படி எல்லாம் பந்தா விடலனா உங்களுக்கு எல்லாம் எப்படி தெரியும் நாங்க அமெரிக்கால பொழச்ச (நாய்)பொழப்பு :-)

said...

//இருங்க இருங்க வெட்டி, ஷ்யாம் அண்ணாகிட்ட எல்லாம் சொல்லி வைக்கறேன்.... //

பாசமலரே...உங்க பாசத்த பாத்து மெய் சிலிர்த்து போச்சு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

said...

நானும் நெக்ஸ்ட் டைம் இண்டியா வரும் போது...ஐ வில் டேக் யூ அவுட் ஃபார் எ டின்னர்...தென் ஐ வில் எக்ஸ்பிளெய்ன் யூ அபவுட் எவ்ரி திங்க் ஹியர்...சீ யா :-)

said...

ஐ பர்காட் டு ஆஸ்க் யூ...நம்ம ஊர்ல ஸ்கிம் மில்க் கிடைக்குமா...ஐ டோண்ட் யூஸ் ஆரோக்யா மில்க் பிகாஸ் ஆப் ஹை ஃபேட் காண்டண்ட் யு சீ...:-)

said...

இதுக்கே இந்த ஆட்டமா ? நான் இந்தியா போயி எட்டு வருஷம் ஆச்சு. எப்பிடி எல்லாம் பிலிம் காட்டலாம்ன்னு நீங்க எல்லாம் சொல்லுங்கப்பு. நீங்களும் தான் தாயி. :)

said...

முதல் தடவ வந்தப்போ குமரனுக்கு கெடச்ச அனுபவம் தான் எனக்கும் கெடச்சுதுங்க. அதனால இந்த முற கண்டிப்பா அலம்பல் பண்ணனுமுன்னு ஓராண்டு கால திட்டம் தீட்டி வந்தா..... அங்கன நம்ம மக்கள் செய்த அலம்பலுக்கு புது வலைப்பதிவே ஆரம்பிக்கலாம்.

Air Deccan அனுபவஸ்தர் ஒருத்தர், ஏங்க உங்க flight-ல பாத்ரூமு இந்த அளவுக்கு மோசமா இருக்குமா, இல்ல .....

Paramount அனுபவஸ்தர் ஒருத்தர், என்ன இருந்தாலும் எங்க ப்ளைட்ல தர்ர மாதிரில்லாம் உங்களுக்கு இருக்காதாம்ல.

இப்படி அங்கன இருந்து வந்த அலம்பலுல, நான் துண்டக் காணமுனுல்ல ஓடியாந்தேன். இத என்ன சொல்றீக.

said...

//தென்றல் said...

வெட்டி பந்தாவுக்குதான் இப்ப 'மவுசு' ஜாஸ்தி!//


வெட்டி.... பந்தா....!!!!
good one...

said...

டிஸ்கி 1-ல இருக்க 3 பேரும் இந்தப் பதிவைத் தவறவிடக்கூடாதுன்னு அவங்க கிட்ட போட்டுக்கொடுத்துட்டேன் :-)

said...

//சேதுக்கரசி said...
டிஸ்கி 1-ல இருக்க 3 பேரும் இந்தப் பதிவைத் தவறவிடக்கூடாதுன்னு அவங்க கிட்ட போட்டுக்கொடுத்துட்டேன் :-)//

அட இதுக்குத்தான் எதிர்வினை பாக்கலையான்னு கேட்டீங்களா??

எலேய் ராயலு... நானும் பெங்களூர்தான் வாறேன்... அங்குட்டு வந்த உடனே நாம கோரமங்களா நந்தினில எண்ணெய்ய டெஸ்ட் பண்றோம். :))

said...

//ஜி சும்மா விட்டுட்டுப் போயிட்டார். இருங்க இருங்க வெட்டி, ஷ்யாம் அண்ணாகிட்ட எல்லாம் சொல்லி வைக்கறேன்.... :))))))))))))))//

பத்தவைச்சிட்டியே இம்சை....

ஏம்மா ஒனக்கு கொலைவெறி :)



//(மொறைக்கப்படாது. பெரிய ஸ்மைலி போட்டிருக்கோம்ல. உங்களை ஒழிக சொல்லி என் பதிவுல பின்னூட்டம் போட்டிருக்கேன்.போயி பாருங்க) //


ரிப்ளை பண்ணியாச்சு :)))

said...

ஏலேய் மருதக் காரைய்ங்களே இந்தப் ஓடு போட்டிங்கன்னா.. நாங்க அமெரிக்க காரனுவ எந்த போடு போடுவோம்னு பாருங்க..
பின்னிப் பெடலெடுத்துருவோம்ல.

சும்மாவா...

அருவா தீட்டுறவைங்களுக்கும் அணுகுண்ட தீடுரவைங்களுக்கும் வித்தியாசமில்லியா..? :))

யோவ் சீரியசா எடுத்துட்டு நெஜமாவேஎ அருவாளக் கொண்டு வந்திராதீங்கப்பூ..

வெட்டி பந்தா அடிக்கிறவங்க எங்கன்னாலும் அடிப்பாங்க.. அமெரிக்கா ரிட்டர்ன் ஆனாலும் அமஞ்சிக்கர ரிட்டர்ன் ஆனாலும் சரி.

நான் சின்ன பைபனாயிருந்தப்ப எங்க ஊர்ல சென்னை, பாம்பேலேந்து வர்றவங்களையெல்லாம் பெர்ருசா பாப்போம். அவங்களும் பெருசா நடந்துகிட்டாங்க.

ஏதோ கோக் குடிச்சுட்டு உங்க வயித்தெரிச்சல கொட்டிட்டீங்க..:))
(ச்சும்மா)

சென்னை வாங்க சந்திப்போம்..
:))

Then I can tell you the stories of "When I was in US.."

:))

said...

//எட்டணா கொடுத்து ரெண்டு தேன்முட்டாயி //
வெலய ஏத்திப்புட்டாய்ங்களா? எட்டணாவுக்கு பத்து குடுப்பாய்ங்களே? அடடா என்னா ருசி! அத்தோட ரெண்டு கமரகட்டு வாங்கி சாப்டா.. அடடா.

//பொரட்டா//
ஊருக்குப் போனதும் அலிபாய் கடைல பொரட்டாவும் சால்னாவும் தான் மொதல்ல சாப்டணும். முட்ட போண்டாவும் சாயாவும் அடுத்து.

//கோக் //
இத்த எப்படித்தான் குடிக்கிறாய்ங்களோ. வாய்ல வெக்க வழங்கல. நானும் இங்க வந்த மொதல் ஆறு மாசம் எல்லா கடைலயும் போயி பதனி கெடைக்குமானு தேடிப் பாத்தேன். எங்கயுமே கெடைக்கல. யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பு.

said...

நெல்லைகாந்த்,


வாங்க... மொத தடவை நம்ம பக்கம் வந்திருக்கீங்க..... :))

மிக்க நன்றி :)

நாலு லைன்'ஐ டாக் எடுத்து ஒரே வார்த்தையிலே பாராட்டியிருங்கீங்க:))
அப்போ நீங்க பெரிய விமர்சகர் தான் )))

said...

//அப்புறம் செல்லம் உனக்கு ஒரு நாளைக்கு onsite offer வரும்ன்றத மறந்துட்டு பேசிக்கிட்டு இருக்கறப்பு :))) //

இம்சை,

ஆறு வருசமா இந்த IT
யிலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கோம் , நமக்கு வாறத onsite offer'ஆ???? நாந்தான் வேணாமின்னு சொல்லிட்டேன், என்ன இருந்தாலும் சேலம் போயிட்டு அங்கே நம்ம ஊர்க்கு போறமாதிரி வெளிநாட்டிலே இருந்து வரமுடியுமா???

(நான் என்ன சொல்லுறேன்னு ஒங்களுக்கு புரியுதா?? )

said...

ஆமா ஜி ஏதோ என்னால முடிஞ்ச சமூக சேவை :)

//அட இதுக்குத்தான் எதிர்வினை பாக்கலையான்னு கேட்டீங்களா??//

said...

எலேய் ராமு,
இது எல்லாம் ரொம்ப ஓவருடி. தப்பி தவறி இந்த பக்கம் வந்தேன்னு வையுடி. பிளைட்டுகுள்ள நாயை விட்டு கடிக்கச்சொல்லுவேன்.

said...

When I am in the US அப்படின்னு ஒரு பதிவு போடணும் போல இருக்கே!!

said...

:))))

நான் போனது உருகுவே..புதரகம் இல்ல..என்னை டிஸ்கில சேர்த்திருக்க வேண்டாம் :P

said...

//இந்த 'டிஸ்கி' இல்லாம படிச்சாகூட உண்மையதான் சொல்லுதீங்க..//

தென்றல்,

முதன் வருகைக்கு மிக்க நன்றி..... என்னோட ஃபிரண்ட் ரெண்டு மாசந்தான் அமெரிக்கா போயிட்டு வந்தான், ஐயோ வந்ததிலிருந்து ஒரே பீட்டரு,எல்லாத்திலேயும் நொணநாட்டியம் :((

/'டேய். நீ அமெரிக்காவுல தான் இருந்தியா?/
குமரன் சொல்லுறதும் உண்மைதான்... வெட்டி பந்தாவுக்குதான் இப்ப 'மவுசு' ஜாஸ்தி! //

அது சரி..... அப்பிடியே கண்டினியூ பண்ணுங்க :)

said...

// ஆறு வருசமா இந்த IT
யிலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கோம் , நமக்கு வாறத onsite offer'ஆ???? நாந்தான் வேணாமின்னு சொல்லிட்டேன், என்ன இருந்தாலும் சேலம் போயிட்டு அங்கே நம்ம ஊர்க்கு போறமாதிரி வெளிநாட்டிலே இருந்து வரமுடியுமா???

(நான் என்ன சொல்லுறேன்னு ஒங்களுக்கு புரியுதா?? )
//

புரியலையே...

said...

ராம் ஹைதராபாத் புளுஸ் அப்படின்னு ஒரு படம் ரொம்ப நாளுக்கு முன்ன வந்துச்சு.. அதுல்ல வர்ற ஹிரோ இதை மாதிரி லந்து பண்றதை நல்லா நக்கல் பண்ணியிருப்பாங்க... சரி எப்படியோ ஒட்டு மொத்த அமெரிக்க வாழ் பதிவுலகத்தையும் வம்புக்கு இழுத்துட்ட...ஸ்டார் மீசிக் தான் ஓனக்கு...

said...

என்னை இல்லன்னு நினைக்கிறேன். :))))))))))

said...

:))

said...

இன்னொண்ணு சொல்லட்டுமா?
"vocabulary"--சும்மா போனா வந்தா,"cool man, big deal, i appreiciate it" சொல்லி கடுப்படிப்பொம்மில்ல??!:):)

இல்ல இப்பெல்லாம் அங்கெயே இப்படிதான் பேசரீங்களா??:):)

said...

ராம்

சமீபமா கோரமங்களா வந்தப்போ யு எஸ் க்கு போன பீலிங் பா..நம்ம க்ராஸ் பன்றவங்க பேசுற மொழி ..சாப்பாட்டு கடைங்க ..forum complex nnu நம்ம ஊர் ,,ஊர் மக்க எல்லாம் மாறிட்டாங்கப்பா..

ஆமா நீங்க இவிங்கள பாத்து கோவப்படரது இல்லியா?

said...

Hello!
Thank,s for you work and have a good week

said...

\\ஜாவா பாவலர்\\

;-))))))

said...

நமக்கெல்லாம் நம்ம ஊரு தாங்க ராம்.. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா..

said...

போடுகிறேன் இப்போது நாற்பது..
தூக்கட்டும் உங்களை தமிழ்மணத்திலிருந்து...WAHAHAHA...

said...

//ஜி - Z said...
அடப்பாவிகளா... உள்குத்துக்காகவே இந்த டிஸ்கிய உருவாக்கியிருக்கீயளா?? //

உங்களை குத்த எவ்வளவோ ட்ரை பண்ணாரு ராமு. இப்போ சாதிச்சுட்டாரு ஜி.. ஓடிவாங்க ஜி..

said...

ராமு, உனக்கு US போகிற வாய்ப்பு கிடைக்கலன்னு வருத்ததுல எழுதுன போஸ்ட்டுதானே இது???

said...

எங்கே என் மற்ற பின்னூட்டங்கள் ராம்?

said...

US ரிட்டன வச்சி காமடி கிமடி பண்னலயே !

said...

/
//வெட்டி பந்தாவுக்குதான் இப்ப 'மவுசு' ஜாஸ்தி!//
அது சரி..... அப்பிடியே கண்டினியூ பண்ணுங்க :)
/
ராம், நான் சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க....
இல்ல..நான் தெளிவா சொல்லலையா?

said...

//ROTFL...என்ன ராயலு பொங்கி எழுந்து இருக்கீக போல...சும்மாவா அப்படி எல்லாம் பந்தா விடலனா உங்களுக்கு எல்லாம் எப்படி தெரியும் நாங்க அமெரிக்கால பொழச்ச (நாய்)பொழப்பு :-) //

வாங்க 12B,

உங்க கமெண்ட் படிச்சிட்டு இப்போ நானு ROFTL :)

said...

//நானும் நெக்ஸ்ட் டைம் இண்டியா வரும் போது...ஐ வில் டேக் யூ அவுட் ஃபார் எ டின்னர்...தென் ஐ வில் எக்ஸ்பிளெய்ன் யூ அபவுட் எவ்ரி திங்க் ஹியர்...சீ யா :-) //

ஓ கூல் மேன். வென் யூ ஆர் கம் ஹியர், ஐ யம் ஈகர்'லி வெயிட்டிங் பார் த டின்னர் ( ஐ நோ வெரி வெல், யூ ஒன்லி பே த மணி)

//ஐ பர்காட் டு ஆஸ்க் யூ...நம்ம ஊர்ல ஸ்கிம் மில்க் கிடைக்குமா...ஐ டோண்ட் யூஸ் ஆரோக்யா மில்க் பிகாஸ் ஆப் ஹை ஃபேட் காண்டண்ட் யு சீ...:-) ///

வொய் யூ நீட் மில்க்?? எனிவே ஹியர் வீ கேன் கெட் த பாகார்டி :)

said...

//இதுக்கே இந்த ஆட்டமா ? நான் இந்தியா போயி எட்டு வருஷம் ஆச்சு. எப்பிடி எல்லாம் பிலிம் காட்டலாம்ன்னு நீங்க எல்லாம் சொல்லுங்கப்பு. நீங்களும் தான் தாயி. :) //

வாங்க உண்மை,

வெட்டிப்பயல் பதிவிலே பின்னூட்டம் போடுற உண்மை நீங்கதானா?? இல்ல அவரு பேருலே பொய்'ஆ இங்கே வந்திட்டிங்களா??? ;)

said...

/முதல் தடவ வந்தப்போ குமரனுக்கு கெடச்ச அனுபவம் தான் எனக்கும் கெடச்சுதுங்க. அதனால இந்த முற கண்டிப்பா அலம்பல் பண்ணனுமுன்னு ஓராண்டு கால திட்டம் தீட்டி வந்தா..... அங்கன நம்ம மக்கள் செய்த அலம்பலுக்கு புது வலைப்பதிவே ஆரம்பிக்கலாம். //


வாங்க காட்டாறு,

நல்லா சிந்திச்சுதான் பேரு வைச்சுக்கிட்டிங்க போல? இப்போ புதரகத்துக்கு போயிட்டு திரும்புன இந்தமாதிரி தான் பந்தா பண்ணனுமின்னு சொல்லுறீங்க, ஓகே செஞ்சுறலாம் :))

//Air Deccan அனுபவஸ்தர் ஒருத்தர், ஏங்க உங்க flight-ல பாத்ரூமு இந்த அளவுக்கு மோசமா இருக்குமா, இல்ல .....//

ஹீக்கும் நானும் அந்த Airdeccan'லே ஊருக்கு போனேன்... வேற ஒன்னும் சொல்லுறதுக்கில்லை :((

//Paramount அனுபவஸ்தர் ஒருத்தர், என்ன இருந்தாலும் எங்க ப்ளைட்ல தர்ர மாதிரில்லாம் உங்களுக்கு இருக்காதாம்ல.//

அவங்க வாங்குற காசுக்கு என்ன வேணுமின்னாலும் தரலாம் :((

//இப்படி அங்கன இருந்து வந்த அலம்பலுல, நான் துண்டக் காணமுனுல்ல ஓடியாந்தேன். இத என்ன சொல்றீக. //

ஹி ஹி அப்பிடித்தான் நல்லவங்க'ன்னா நாலுபக்கம் கணக்குவழக்கு இல்லமே அடி விழந்தான் செய்யும், நீங்கதான் கொஞ்சம்கூட அசரமே இருக்கணும் :)

said...

//சேதுக்கரசி said...
டிஸ்கி 1-ல இருக்க 3 பேரும் இந்தப் பதிவைத் தவறவிடக்கூடாதுன்னு அவங்க கிட்ட போட்டுக்கொடுத்துட்டேன் :-)
//

வாங்க சேது மேடம்,,


நல்லா வேலையை தான் பார்த்து இருக்கீங்க... அவங்க யாருக்கும் இந்த பதிவை பத்தி தெரியாமலே போயிருமோன்னு பயந்தேன் :)))

said...

//அட இதுக்குத்தான் எதிர்வினை பாக்கலையான்னு கேட்டீங்களா??

எலேய் ராயலு... நானும் பெங்களூர்தான் வாறேன்... அங்குட்டு வந்த உடனே நாம கோரமங்களா நந்தினில எண்ணெய்ய டெஸ்ட் பண்றோம். :)) //

வாலே ஜியீ,

ஒனக்காக தான் பெங்களூரூ மாநகரமே திரண்டு நிற்கிறது.... எதுக்குன்னா
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஒன்னைய வரவேற்க தாய்யா:)

வந்தவுடனே ஒரு போனை போடு, கோரமங்களா'வுக்கு வந்துறேன் ஹி ஹி

said...

//ஏலேய் மருதக் காரைய்ங்களே இந்தப் ஓடு போட்டிங்கன்னா.. நாங்க அமெரிக்க காரனுவ எந்த போடு போடுவோம்னு பாருங்க..
பின்னிப் பெடலெடுத்துருவோம்ல. //

வாங்க சிறில்,

பெடலெடுக்க போறீங்களா??? என்னோட சைக்கிளிலே பெடல் காணாமே போச்சு... அதை நீங்க எடுத்துருந்தீங்கன்னா கொடுத்துருங்க பிளிஷ் :)

//சும்மாவா...

அருவா தீட்டுறவைங்களுக்கும் அணுகுண்ட தீடுரவைங்களுக்கும் வித்தியாசமில்லியா..? :))//

ஐயோ தமாசு தமாசு :)


//யோவ் சீரியசா எடுத்துட்டு நெஜமாவேஎ அருவாளக் கொண்டு வந்திராதீங்கப்பூ..//

எங்க வீட்டுலே எதுக்கு மஞ்சப்பை இருக்கு??? அதிலே ரெண்டு எடுத்துட்டு வருவோமில்லே :)

//வெட்டி பந்தா அடிக்கிறவங்க எங்கன்னாலும் அடிப்பாங்க.. அமெரிக்கா ரிட்டர்ன் ஆனாலும் அமஞ்சிக்கர ரிட்டர்ன் ஆனாலும் சரி.

நான் சின்ன பைபனாயிருந்தப்ப எங்க ஊர்ல சென்னை, பாம்பேலேந்து வர்றவங்களையெல்லாம் பெர்ருசா பாப்போம். அவங்களும் பெருசா நடந்துகிட்டாங்க.//

Yeah That's true :))

//ஏதோ கோக் குடிச்சுட்டு உங்க வயித்தெரிச்சல கொட்டிட்டீங்க..:))
(ச்சும்மா)//

இளநீரும்,பதநீரும் கிடைக்கிற இடத்திலே அந்த கருமத்தை'யே நான் குடிக்கணும்????

//சென்னை வாங்க சந்திப்போம்..
:))

Then I can tell you the stories of "When I was in US.."//

Sure I'll try :)

:)) //

said...

////எட்டணா கொடுத்து ரெண்டு தேன்முட்டாயி //
வெலய ஏத்திப்புட்டாய்ங்களா? எட்டணாவுக்கு பத்து குடுப்பாய்ங்களே? அடடா என்னா ருசி! அத்தோட ரெண்டு கமரகட்டு வாங்கி சாப்டா.. அடடா.//

வாங்க புயல்,

வெண்பா பதிவெல்லாம் எப்பிடியிருக்கு??? நம்ம வெண்பா வாத்திதான் ஒங்களை அடிக்கடி சொல்லுவாரு :)
தேன்முட்டாயி ருசி வேற எதிலேயாவது இருக்கா என்ன ??


//பொரட்டா//
ஊருக்குப் போனதும் அலிபாய் கடைல பொரட்டாவும் சால்னாவும் தான் மொதல்ல சாப்டணும். முட்ட போண்டாவும் சாயாவும் அடுத்து.//

ஹி ஹி நானே இங்கேயிருந்து ஊரு பக்கம் போனா நைட்'க்கு பொரட்டா சாப்பிட்டு தான் தூங்கிறது... இந்த ஜிலேபி தேசத்திலேயும் பொரட்டா கிடைக்கிது, அதவேற ஒரு லிஸ்ட்'லே தான் சேர்க்கமுடியும் :(

//கோக் //
இத்த எப்படித்தான் குடிக்கிறாய்ங்களோ. வாய்ல வெக்க வழங்கல. நானும் இங்க வந்த மொதல் ஆறு மாசம் எல்லா கடைலயும் போயி பதனி கெடைக்குமானு தேடிப் பாத்தேன். எங்கயுமே கெடைக்கல. யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பு. //

ஏங்க அங்கே சூப்பர் மார்கெட்'லிலே பாட்டிலிலே அடைச்சு விக்கிறதா கேள்விப்பட்டேனே???

said...

//எலேய் ராமு,
இது எல்லாம் ரொம்ப ஓவருடி. தப்பி தவறி இந்த பக்கம் வந்தேன்னு வையுடி. பிளைட்டுகுள்ள நாயை விட்டு கடிக்கச்சொல்லுவேன். //


வாப்பா சந்தோஷ்,

சீக்கிரம் அந்த நாயே ரெடி பண்ணி வை......

ஏன்னா அமெரிக்கா போறதுக்குண்டான நேரம் நெருங்கிட்டு இருக்கு :)

said...

/When I am in the US அப்படின்னு ஒரு பதிவு போடணும் போல இருக்கே!! //

கொத்ஸ் ஒங்களோட அந்த பதிவிலே கும்பி sorry கும்மியடிக்க வீ ஆர் வெயிட்டிஸ் :)

said...

//நான் போனது உருகுவே..புதரகம் இல்ல..என்னை டிஸ்கில சேர்த்திருக்க வேண்டாம் :P //

வாப்பா கப்பிநிலவா,

உருகுவே ஆனாலும் புதரகமா இருந்தாலும் நீ இப்பிடிதான் எல்லார்க்கிட்டேயும் பழகுறேன்னு எனக்கு காதுவழி செய்தி வந்துச்சு...

அதுதான் ஒன்னோட பேரையும் சேர்த்தாச்சு :)

said...

// ஆறு வருசமா இந்த IT
யிலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கோம் , நமக்கு வாறத onsite offer'ஆ???? நாந்தான் வேணாமின்னு சொல்லிட்டேன், என்ன இருந்தாலும் சேலம் போயிட்டு அங்கே நம்ம ஊர்க்கு போறமாதிரி வெளிநாட்டிலே இருந்து வரமுடியுமா???

(நான் என்ன சொல்லுறேன்னு ஒங்களுக்கு புரியுதா?? )
//

புரியலையே... //

இம்சை,

எதாவது ஆத்திர அவசரத்துக்கு பெங்களூரூலே இருந்து நம்மூருக்கு போக பஸ் கிடைக்காட்டியும் சேலம் வரையும் போயிட்டு அங்கேயிருந்து நம்மூருக்கு போயிரலாமின்னு சொன்னேன். இதே வெளிநாட்டிலே இருந்தா அப்பிடி கட் எடுத்து ஃபிளைட்'லே வரமுடியுமா??
:)

said...

/ராம் ஹைதராபாத் புளுஸ் அப்படின்னு ஒரு படம் ரொம்ப நாளுக்கு முன்ன வந்துச்சு.. அதுல்ல வர்ற ஹிரோ இதை மாதிரி லந்து பண்றதை நல்லா நக்கல் பண்ணியிருப்பாங்க... சரி எப்படியோ ஒட்டு மொத்த அமெரிக்க வாழ் பதிவுலகத்தையும் வம்புக்கு இழுத்துட்ட...ஸ்டார் மீசிக் தான் ஓனக்கு... //

வாங்க போர்வாளு,

ஹி ஹி என்னை வம்பு சொம்புன்னு ஏதோ ஏதோ சொல்லி பயமுருந்துறீங்க??? :)

said...

//என்னை இல்லன்னு நினைக்கிறேன். :)))))))))) //

தலை(வி)வலி,

ஒங்களைதான் நான் சொன்னேன்னு எல்லாருக்கும் தெரியும்.... இதிலே என்ன ஒப்புதல் வாக்குமுலமா கொடுக்கிறீங்க :)

said...

//தம்பி said...
:)) //

:((

said...

//இன்னொண்ணு சொல்லட்டுமா?
"vocabulary"--சும்மா போனா வந்தா,"cool man, big deal, i appreiciate it" சொல்லி கடுப்படிப்பொம்மில்ல??!:):)//

Hey Radha,,

Welcome to my blog. Sounds good puddy :)

//இல்ல இப்பெல்லாம் அங்கெயே இப்படிதான் பேசரீங்களா??:):) //

Yes.. that's as usual.... :)

said...

//ராம்

சமீபமா கோரமங்களா வந்தப்போ யு எஸ் க்கு போன பீலிங் பா..நம்ம க்ராஸ் பன்றவங்க பேசுற மொழி ..சாப்பாட்டு கடைங்க ..forum complex nnu நம்ம ஊர் ,,ஊர் மக்க எல்லாம் மாறிட்டாங்கப்பா..

ஆமா நீங்க இவிங்கள பாத்து கோவப்படரது இல்லியா? //

முதன் வருகைக்கு மிக்கநன்றி ஐயனார்..

இது எல்லாரையும் ஓட்டின பதிவு தானே... இதிலே என்ன வித்தியாசம் இருக்கு... அங்கனே போயிட்டு வந்ததும் இங்கே பூரா பயலுவெல்லாம் அப்பிடிதான் பேசிட்டு திரியுறாய்ங்கே :)

said...

/Hello!
Thank,s for you work and have a good week //

Dear David,

I really apprecite for your comment. still you don't understand the language you visiting the blog.. that's great :)

said...

//கோபிநாத் said...
\\ஜாவா பாவலர்\\

;-))))))
//

ஏய்யா உண்மையை சொன்னதுக்கு சிரிக்கிறீங்க????

said...

//நமக்கெல்லாம் நம்ம ஊரு தாங்க ராம்.. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா.. //

வாங்க கார்த்திக்,

நீங்க இப்போ புதரகத்திலே இருந்தாலும் இந்த வார்த்தைகளை சொல்லுறது உண்மையிலே பெருமையா இருக்குங்க :)

said...

/போடுகிறேன் இப்போது நாற்பது..
தூக்கட்டும் உங்களை தமிழ்மணத்திலிருந்து...WAHAHAHA... //


நல்லாயிரு தாயி :)

//ராமு, உனக்கு US போகிற வாய்ப்பு கிடைக்கலன்னு வருத்ததுல எழுதுன போஸ்ட்டுதானே இது??? //

இன்னும் கொஞ்ச நாளிலே அங்கேயிருந்து தான் போஸ்ட் போடப்போறேன் :(((

said...

//சுந்தர் / Sundar said...
US ரிட்டன வச்சி காமடி கிமடி பண்னலயே !
//


வாங்க சுந்தர்,

நான் எழுதுன இந்த போஸ்ட் என்ன காமெடியா'வா இருக்கு???

said...

//ராம், நான் சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க....
இல்ல..நான் தெளிவா சொல்லலையா? //


இல்லிங்க தென்றல்,

நானும் தெளிவா தான் சொன்னேன்,

ஃபாரின் ரிட்டர்ன் எல்லாரும் இந்தமாதிரி பந்தா பண்ணலைன்னா நம்மளை யாரும் மதிக்க மாட்டாய்ங்கே :))

said...

//
வெட்டிப்பயல் பதிவிலே பின்னூட்டம் போடுற உண்மை நீங்கதானா?? இல்ல அவரு பேருலே பொய்'ஆ இங்கே வந்திட்டிங்களா??? ;)

//

நானே தான். மண்டபத்திலிருந்து யாரும் இல்லை.

said...

ராம்ஸ் யாரு உங்களை இப்படி நோகடிச்சிருக்காங்க ;)