Tuesday, March 27, 2007

weirder habits .....

என்கிட்டே இருக்கிற விசித்திர குணத்தை சொல்லணுமின்னு நம்ம பாசக்கர பயப்புள்ள ஜி கூப்பிட்டுருக்காரு, அவரு கூப்பிட்ட அஞ்சு பேருகளிலே வெட்டி, CVR,இம்சையரசி, இணைய பாடகி மருதம்ன்னு எல்லாரும் பதிவு போட்டுட்டாங்க. என்னை இன்னும் அவரு கூப்பிட்டாரு, அப்புறம் இவரும் கூப்பிட்டாருன்னு பொய் சொல்லமுடியலைங்க, ஏன்னா நம்ம ஜியை தவிர வேற யாரும் என்னை கூப்பிடலை, என்கிட்டே இருக்கிற விசித்திரமான கிறுக்குத்தனமான லூசுத்தனமான, பைத்தியக்கார தனமான மெண்டல்தனமான எல்லாத்தையும் எத்தனை தடவை தான் அனுபவமின்னு மொக்கதனமான பதிவு எழுதுறது.....?? :)




வாசிப்பு:- புத்தக வாசிப்பு இல்லைன்னா நானே இல்லேன்னு சொல்லணும், எந்நேரமும் ஏதாவது ஒன்னை வாசிச்சுட்டு இருப்பேன், எங்க என்ன கிடைச்சாலும் அதிலே என்னமாவது எழுதிருக்கான்னு வாசிப்பேன், ஒரு ரூவா கொடுத்து வாங்கி திங்கிற கடலை பொட்டலம், பார்சல் கட்டி வர்ற சோத்து பொட்டலம், பெரிய ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி இப்பிடி எந்தவொரு பேதம் காட்டாமலே படிப்பேன், வாசிக்கிறதிலே அப்பிடியொரு வெறித்தனம்.

சின்னவயசிலே எனக்கும் என்னோட அக்காவுக்கும் வெள்ளிக்கிழமை காலையிலே சிறுவர்மலர் படிக்கிறதுக்கு பெரிய சண்டையே வரும், அதுவும் எனக்கும் அந்த புத்தகம் வந்ததும் மொத ஆளா நாந்தான் படிக்கனுமின்னு ஒரு பைத்தியம் உண்டு, இன்னும் இவ்வளவு பெரியாளா ஆனபிறகும் காலையிலே எந்திரிச்சதும் நீயூஸ் பேப்பரை முதலில் யாரு படிக்கிறதுன்னு எங்கப்பாவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை வரும், அதுவும் நீயூஸ்பேப்பர் படிக்கிறப்போ அது ஒன் பை ஒன்'ஆ இருக்கணும், நீயூஸ்பேப்பர் படிக்கிறதை மொதப்பக்கத்திலே இருந்து கடைசி பக்கம் வர்றவரைக்கும் வைச்சிட்டே படிக்கிறது தான் நீயூஸ் பேப்பருக்கு மரியாதைன்னு நினைக்கிறவன் நானு, ஆனா எங்கப்பா நான் படிக்கிறோப்ப நடுப்பக்கத்தை கொடுன்னு கேட்டு நச்சரிப்பார், நான் எதையும் கொடுக்கமாட்டேன், இதுனாலே பெரிய சண்டை வந்து எங்கப்பா நடுப்பக்கத்தை பிடுங்குவாரு, நான் அவரோட கோபத்தை கூட்டுறதுக்கு நீயூஸ் பேப்பர் மொத்தயும் ஸ்டாப்ளர் பின்'னடிச்சுட்டு படிப்பேன்.

படிக்கிற புத்தகங்களிலே கதை,கட்டுரை,பிக்சன்,லொட்டு லொஸ்குன்னு எதையும் பிரிச்செல்லாம் வாங்கி படிக்கிறதே கிடையாது, குறிப்பிடத்தக்க முறையிலே என்னை கவர்ந்த எல்லா புத்தகங்களை கணக்குவழக்கிலாமே திரும்ப திரும்ப படிப்பேன், சிலசமயம் கல்கி அவரோட செல்வனை பத்தி சொல்லுறதையும் ஷிட்னி ஷெல்டன் தன்னோட கதாநாயகியோட கதையை ஆரம்பிக்கிறதையும் படிப்பேன்,படிப்பேன், படிச்சிட்டே இருக்கேன்.

ஞாபக சக்தி:- இது என்க்கிட்டெ இருக்கிற பெரிய பிரச்சினை, முக்கியமான கடவுசொல் எல்லாம் மறந்து தொலைஞ்சிரும் ஆனா நான் யாருக்கிட்டே வாங்கினதோ இல்லை நான் யாருக்கோ கொடுத்த வசவுசொல் மட்டும் அப்பிடியே ஞாபகம் இருக்கும். நான் திட்டு வாங்கிருந்தேனா அதை ஞாபகம் வைச்சிட்டு அவங்கிட்டே பேசவே மாட்டேன், அவங்களே வந்து தான் செஞ்சது தப்புன்னு வந்து கேட்டாலும் அந்த மன்னிப்பை ஏத்துக்காத மனோபாவமெல்லாம் இருந்துச்சு, ஆனா இப்போ எல்லாம் கொஞ்ச கொஞ்சமா என்னையே நானே மாத்திட்டு வாறேன், ஆனா புகை கூண்டுக்கு வெள்ளை அடிச்சாலும் லேசா தெரியிற புகை கருப்பு மாதிரி வாங்கின திட்டு வார்த்தைகளை அப்பிடியே மனசிலே வைச்சிருப்பேன்.

தனிமை:- சிலசமயங்களிலே ஆள் ஆரவமற்ற காட்டிலே நம்ம மட்டும் தனியா இருந்தா எப்பிடியிருக்குமின்னு நினைச்சு பார்த்துக்குவேன், அப்பிடியொரு சூழ்நிலை வந்தா என்னன்னெ பண்ணனுமின்னு பெரிய திட்டங்கள் மனசிலே இருக்கு. இன்னமும் வீட்டிலே வாரக்கடைசியிலே தனியா உட்கார்த்துருப்பேன், நண்பர்கள் எல்லாம் வெளியே போலாமின்னு போனாலும் சரி, நான் எங்கேயும் போகமே அப்பிடியே தனியா வீட்டுக்குள்ளே இருப்பேன், நானும் என்னை சுற்றியிருக்கிற அந்த வெறுமையும் தான் பிடிக்கும்.

அறிவுரை:- இது எனக்கிட்டே இருக்கிற கெட்டகுணம்.எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் அறிவுரையை அள்ளி தெளிப்பேன், ஒரு தடவை எங்க கம்பெனி VP கூட மீட்டிங், அவருக்கும் அங்கே வழக்கம்போலே அறிவுரையை அள்ளிக்கொட்டொ கொட்டுன்னு கொட்டி என்னையே பார்த்தாலே இப்போ ஓடிப்போயிருவாரு.ஊர்ப்பக்கம் போனா யாராவது படிக்கிற பசங்க வந்து படிக்கிறதுக்கு ஏத்தமாதிரி வேலையை பத்தி பேசிட்டா போதும், ஆரம்பிச்சிரும் அறிவுரை அய்யாசாமி பெர்சனாலிட்டி.... இப்போதைக்கு ஜாவா தான் பீக், போனத்தடவை இருந்தமாதிரி VB'க்கு இப்போ மவுசு இல்லேன்னு அள்ளித் தெளியோ தெளிச்சிருவேன்.

ஆர்வக்கோளாறு:- சும்மா இருக்கிற நேரத்திலே ஏதாவது ஒன்னே ஆர்வமா செஞ்சு பார்ப்போமின்னு ஆரம்பிப்பேன்.சிலசமயங்களிலே அந்த விஷயம் எனக்கு சம்பந்தமில்லாமே இருக்கும், ஆனா எதையாவது கத்துகணுமின்னு அதை போட்டு நோண்டுறது, வீட்டிலே அந்தமாதிரிதான் எல்லா எலக்ட்ரிக்கல் திங்க்'ஸிலே ரிப்பேர் பார்க்கிறேன்னு ஒப்பேத்திருவேன். அந்த வகையிலே எல்லாரும் எழுதுறமாதிரி நாமெல்லும் பதிவு எழுதிப்பிடாலமின்னு தைரியமா பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சது. ஆனா இன்னவரைக்கும் உருப்படியா ஒன்னுமே எழுதினதே கிடையாது. எல்லாமே ஆர்வக்கோளாறிலே ஓப்பேத்தின கணக்குதான்.

இந்த மாதிரியெல்லாம் மொக்கை போடாமே நல்லா எழுதமின்னு கூப்பிட போற அஞ்சு பேர்:-

1) தல கைப்புள்ள,
2) விவசாயி இளா,
3) மதுரை தங்கம் தீக்ஷ்ண்யா,
4) பாசமலர் அவந்திகா,
5) பாசமலர் தூயா,

தலைப்புக்கு காரணமறிய இங்கே சுட்டுங்கள்.;)

[பிற்சேர்க்கை:- இந்த மாதிரி மடத்தனமா தலைப்பு வைச்சதுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்... :( ]

56 comments:

இலவசக்கொத்தனார் said...

யப்பா சாமி, நான் ஒண்ணும் உன்னைத் திட்டடலையே. தெரியாம எதாவது சொல்லி இருந்தா மனசுல வெச்சுக்காதே தெய்வமே.

MyFriend said...

இன்னும் யயாரும் பின்னூட்டம் போடலையா?

அப்போ நானாதான் ஃபர்ஸ்ட்டா வந்து மாட்டிக்கிட்டேனா? :-P

சும்மா! தமாசு :-)

MyFriend said...

//இவ்வளவு பெரியாளா ஆனபிறகும் காலையிலே எந்திரிச்சதும் நீயூஸ் பேப்பரை முதலில் யாரு படிக்கிறதுன்னு எங்கப்பாவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை வரும்,//

ச்சீச்சீ.. இந்த நாளிததழ் படிக்கிற பழக்கமெல்லாஅம் உங்களுக்கு இருக்கா? ;-)

MyFriend said...

நியூஸ் பேப்பர் நான் படிச்சா ஒரு ரெண்டு நிமிடம் கூட எடுக்காது.. முதல் பக்கம் செய்தியை பபார்ப்பேன். பிறகு அப்படியே கடைசி பக்கம் திருப்பி ஸ்போர்ட்ஸ் நியூஸ் படிப்பேன். பிறகு கடைசிக்கு முதல் பக்கம் திருப்பி இப்போ தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பார்ப்பேன்..

சண்டே பேப்பர்ன்னா எக்ஸ்ட்ராவா சினிமா பத்தி நியூஸ் வரும். சோ, அன்னைக்கு அதைதான் முதல்ல படிப்பேன். ஒரு ரெண்டு நிமிடம் ஜாஸ்தியாகும். ;-)

மத்த பக்கங்களை புரட்ரதே இல்லை.. ;-)

MyFriend said...

//அப்பிடியொரு சூழ்நிலை வந்தா என்னன்னெ பண்ணனுமின்னு பெரிய திட்டங்கள் மனசிலே இருக்கு//

அதை இங்கனே கொஞ்சம் புட்டு புட்டு வைக்கிறது!!!!

MyFriend said...

//சும்மா இருக்கிற நேரத்திலே ஏதாவது ஒன்னே ஆர்வமா செஞ்சு பார்ப்போமின்னு ஆரம்பிப்பேன்.சிலசமயங்களிலே அந்த விஷயம் எனக்கு சம்பந்தமில்லாமே இருக்கும், //

இந்த விஷயங்களும் நான் செய்யுற விஷயத்தில் ஒன்னுதான். :-)

Unknown said...

SO U FROM NIMHANS ???!!!!

Avanthika said...

//என்கிட்டே இருக்கிற விசித்திரமான கிறுக்குத்தனமான லூசுத்தனமான, பைத்தியக்கார தனமான மெண்டல்தனமான எல்லாத்தையும் எத்தனை தடவை தான் அனுபவமின்னு மொக்கதனமான பதிவு எழுதுறது.....??///

இதுலேயே எல்லாம் சொல்லிட்டீங்க

இராம்/Raam said...

//யப்பா சாமி, நான் ஒண்ணும் உன்னைத் திட்டடலையே. தெரியாம எதாவது சொல்லி இருந்தா மனசுல வெச்சுக்காதே தெய்வமே. //

கொத்ஸ்,

ஹி ஹி... நாந்தான் தெளிவா சொல்லிருக்கேன்'லே... என்னையே நானே கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு வாறேன்னு.... :)

இன்னும் கொஞ்சம் "தெளிவா" ஆனதுக்கப்புறம் அதெய்யலாம் மறந்துறேன்.... ok'வா :))

இராம்/Raam said...

//இன்னும் யயாரும் பின்னூட்டம் போடலையா?

அப்போ நானாதான் ஃபர்ஸ்ட்டா வந்து மாட்டிக்கிட்டேனா? :-P

சும்மா! தமாசு :-) //

தங்கச்சிக்கா,

உங்களுக்கு முன்னாடியே கொத்ஸ்ண்ணே போட்டுறாரு... :)

//ச்சீச்சீ.. இந்த நாளிததழ் படிக்கிற பழக்கமெல்லாஅம் உங்களுக்கு இருக்கா? ;-) //

ஆமாங்க... ஆனா இங்கே பெங்களூரூலே சரியா தமிழ் பேப்பர்ஸ் கிடைக்காது, வர்ற இங்கிலிஸ்பிஸ் பேப்பரை எழுத்துக்கூட்டி வாசிக்கிறதுக்குள்ளே ஆபிஸ் லேட்டாயிரும்.... ஹி ஹி

//அதை இங்கனே கொஞ்சம் புட்டு புட்டு வைக்கிறது!!!! //

எல்லாத்தையும் ஒரே பதிவிலே சொல்லிட்டா, அப்புறம் அடுத்த பதிவு எழுதுறதுக்கு மேட்டர் வேணாமா??? ;)

//இந்த விஷயங்களும் நான் செய்யுற விஷயத்தில் ஒன்னுதான். :-) //

எல்லாரும் ஒரே இனம்.... ஹி ஹி

இராம்/Raam said...

//SO U FROM NIMHANS ???!!!! //

ஆமாம் ஸ்டாரு :)

இராம்/Raam said...

/இதுலேயே எல்லாம் சொல்லிட்டீங்க //

வாம்மா பாசமலர் தங்கச்சியே,

மொத்தடவை நம்ம பக்கம் வந்திருக்கே.... ரொம்ப நன்றிம்மா :)

CVR said...

ம்ம்ம்
எனக்கும் உங்கள மாதிரி சில விஷயங்கள் பிடிக்கும்/பிடிக்காது.
உதாரணத்துக்கு தனிமையை சொல்லாம். குறிப்பா கதாநாயகனும் கதாநாயகியும் காட்டுல தனியா வாழுரா மாதிரி படம் எல்லாம் பார்த்தா (Qayamat se Qayamat tak மாதிரி) அந்த சந்தர்ப்பத்துல நான் என்ன செய்வேன்னு கற்பன்னி பண்ண ஆரம்பிச்சிடுவேன்.

//
அதுவும் நீயூஸ்பேப்பர் படிக்கிறப்போ அது ஒன் பை ஒன்'ஆ இருக்கணும், நீயூஸ்பேப்பர் படிக்கிறதை மொதப்பக்கத்திலே இருந்து கடைசி பக்கம் வர்றவரைக்கும் வைச்சிட்டே படிக்கிறது தான் நீயூஸ் பேப்பருக்கு மரியாதைன்னு நினைக்கிறவன் நானு//

எனக்கும் அதே எண்ணம்தான் தல!!!உங்களுக்கு உங்க அப்பா கேட்கரா மாதிரி எனக்கு என் தாத்தா கேப்பாரு!!! ;-)

Santhosh said...

யப்பா ராயலு எப்பயாச்சு திட்டி இருந்தா மறந்துடுலே. ஊரு பக்கம் வரும் பொழுது ஆளை (நீயெல்லாம் ஒரு ஆளு உன்னை அடிக்க ஒரு ஆளான்னு நீ சொல்றது காதுல விழுது :)) ) வெச்சி அடிச்சிராதலே.

இராம்/Raam said...

//ம்ம்ம்
எனக்கும் உங்கள மாதிரி சில விஷயங்கள் பிடிக்கும்/பிடிக்காது.
உதாரணத்துக்கு தனிமையை சொல்லாம். குறிப்பா கதாநாயகனும் கதாநாயகியும் காட்டுல தனியா வாழுரா மாதிரி படம் எல்லாம் பார்த்தா (Qayamat se Qayamat tak மாதிரி) அந்த சந்தர்ப்பத்துல நான் என்ன செய்வேன்னு கற்பன்னி பண்ண ஆரம்பிச்சிடுவேன்.//

வாங்க CVR,

மொததடவை நம்ம பக்கம் வந்துருக்கீங்க.... அதுக்கு ரொம்ப நன்றிங்கோ:)

ஏங்க தனிமை'ன்னு சொல்லிட்டு கதாநாயகின்னு சொல்லி வைச்சிருக்கீங்க???? ;)

இராம்/Raam said...

//யப்பா ராயலு எப்பயாச்சு திட்டி இருந்தா மறந்துடுலே. ஊரு பக்கம் வரும் பொழுது ஆளை (நீயெல்லாம் ஒரு ஆளு உன்னை அடிக்க ஒரு ஆளான்னு நீ சொல்றது காதுல விழுது :)) ) வெச்சி அடிச்சிராதலே. //

வாப்பா சந்தோஷ்,

நான் புதரகம் வர்றோப்போ ஃபிளைட்குள்ளே நாயை விட்டு கடிக்கவிடுவேன்னு சொன்னது நீதானே????

இருக்கட்டும் இருக்கட்டும், ஒன்னையே ஆளு அடிக்கிறதுக்கு இப்போ பெரிய ஸ்கெட்ச் ஒன்னு போட்டுக்கிட்டு இருக்கேன். :)

Syam said...

//என்கிட்டே இருக்கிற விசித்திரமான கிறுக்குத்தனமான லூசுத்தனமான, பைத்தியக்கார தனமான மெண்டல்தனமான எல்லாத்தையும் எத்தனை தடவை தான் அனுபவமின்னு மொக்கதனமான பதிவு எழுதுறது//

புரிஞ்சு போச்சு ராயலு...புரிஞ்சு போச்சு :-)

மு.கார்த்திகேயன் said...

//ஒரு ரூவா கொடுத்து வாங்கி திங்கிற கடலை பொட்டலம், பார்சல் கட்டி வர்ற சோத்து பொட்டலம், பெரிய ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி இப்பிடி எந்தவொரு பேதம் காட்டாமலே படிப்பேன், வாசிக்கிறதிலே அப்பிடியொரு வெறித்தனம்.
//

எனக்கும் தான்.. நான் அதோட, எங்கள் கடையில் பொட்டலம் மடிக்கிற பேப்பரை எல்லாம் படிப்பேன்.. நான் படித்த பிறகு தான் அதை வைத்து பொட்டலமே மடிப்பேன்.. சில சமயம் சில விறுவிறுப்பான தொடர்கதையின் மூன்று பக்கங்கள் இருக்கும்.. நாலாவது பக்கமிருக்காது.. அது தொடர்கதை என்றாலும், அந்த நாலாவது பேப்பருக்காக நான் பாடாய் படுவேன்

மு.கார்த்திகேயன் said...

//புகை கூண்டுக்கு வெள்ளை அடிச்சாலும் லேசா தெரியிற புகை கருப்பு மாதிரி வாங்கின திட்டு வார்த்தைகளை அப்பிடியே மனசிலே வைச்சிருப்பேன்.
//

ஆஹா.. என்னே ஒரு உதாரணம், ராம் :-)

கோபிநாத் said...

ராம் அண்ணே...உங்க வியரடு எல்லாத்தையும் பார்த்து கொஞ்சம் பயமா இருக்குண்ணே....நான் ஏதவாது சொல்லியிருந்தா (அப்படி எதுவும் இருக்காதுன்னு நினைக்குறேன்) மனசுல வச்சிகிடாதிக.

கோபிநாத் said...

இந்த நீயூஸ் பேப்பர் விஷயம் அப்படியே எனக்கும் இருக்குண்ணே....அதுவும் எங்க அப்பாவும் இப்படி தான் ஒரே நச்சு ;-)))

CVR said...

நீங்க இத சொல்லுவீங்கன்னு நான் எதிர் பார்த்தேன்!!
தனிமை என்பது கதாநாயகி மேட்டர் வேறுதான்!! ஆனால் காடு,தனிமை,அது சம்பந்தப்படுத்தி வரும் சினிமாக்கள் அப்படி இப்படின்னு பல எண்ணங்கள் வந்ததால கொஞ்சம் குழம்பி போயிட்டேன். :-)
இது என்னோட வியர்டுதனங்களிலே ஒன்னு!!
ஹி ஹி!! :-))

Unknown said...

I can underestand your usage of the word NIMHANS to depict your obsession with reading news.
But as a parent of mentallyill child who is using this great institution, i would have preferred you have not used it in derogatory way.
with kind regards.

இராம்/Raam said...

/captainjohann said...
I can underestand your usage of the word NIMHANS to depict your obsession with reading news.
But as a parent of mentallyill child who is using this great institution, i would have preferred you have not used it in derogatory way.
with kind regards.
//

Dear captainjohann,

I apologize to use the name of NIMHANS. Actually I tried to show i am having some weirder habits on my life, and hence a use the hospital name’s. I didn’t think that it has affected you so much. I really feel for it and beg your apologize. I have changed the title name.

Regards,
Raam.

இராம்/Raam said...

//புரிஞ்சு போச்சு ராயலு...புரிஞ்சு போச்சு :-) //


வாங்க 12B,

உங்களுக்கு புரிஞ்ச விஷயத்தை வெளியே யாருக்கிட்டேயும் சொல்லிறாதீங்க பிளிஷ் :)

இராம்/Raam said...

//எனக்கும் தான்.. நான் அதோட, எங்கள் கடையில் பொட்டலம் மடிக்கிற பேப்பரை எல்லாம் படிப்பேன்.. நான் படித்த பிறகு தான் அதை வைத்து பொட்டலமே மடிப்பேன்.. சில சமயம் சில விறுவிறுப்பான தொடர்கதையின் மூன்று பக்கங்கள் இருக்கும்.. நாலாவது பக்கமிருக்காது.. அது தொடர்கதை என்றாலும், அந்த நாலாவது பேப்பருக்காக நான் பாடாய் படுவேன் //

வாங்க கார்த்திக்,

அடடா எல்லாரும் ஓரே மாதிரியே இருக்கோம் பாருங்க...... :)

//ஆஹா.. என்னே ஒரு உதாரணம், ராம் :-) ///

ஹி ஹி நன்றி கார்த்திக் :)

இராம்/Raam said...

/ராம் அண்ணே...உங்க வியரடு எல்லாத்தையும் பார்த்து கொஞ்சம் பயமா இருக்குண்ணே....நான் ஏதவாது சொல்லியிருந்தா (அப்படி எதுவும் இருக்காதுன்னு நினைக்குறேன்) மனசுல வச்சிகிடாதிக. ///

வாங்க கோபிண்ணே,,

நான் இப்போ நல்லவனா ஆக முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன்... :)

//இந்த நீயூஸ் பேப்பர் விஷயம் அப்படியே எனக்கும் இருக்குண்ணே....அதுவும் எங்க அப்பாவும் இப்படி தான் ஒரே நச்சு ;-))) //

:))))

இராம்/Raam said...

//இது என்னோட வியர்டுதனங்களிலே ஒன்னு!!
ஹி ஹி!! :-))//

CVR,
இதுக்கு பேருதான் சமாளிப்பிகேஷன்னு சொல்லுறது :)

Anonymous said...

ராம்ஸ், எனக்கு முன்னாடியே தெரியும் நீங்க பயங்கர வியர்ட் என்று...என்ன இருந்தாலும் ராமண்ணாவை நான் விட்டுகுடுக்க முடியுமா? ;)
[என்னில கோவம் இருந்தால் சொல்லி இருக்கலாம்..இப்படியா என்னை மாட்டிவிடுவது)

Anonymous said...

//ஒரு ரூவா கொடுத்து வாங்கி திங்கிற கடலை பொட்டலம், பார்சல் கட்டி வர்ற சோத்து பொட்டலம், பெரிய ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி இப்பிடி எந்தவொரு பேதம் காட்டாமலே படிப்பேன், வாசிக்கிறதிலே அப்பிடியொரு வெறித்தனம்.//

பயமா இருக்கு இராம் :(

Anonymous said...

/அடிச்சாலும் லேசா தெரியிற புகை கருப்பு மாதிரி வாங்கின திட்டு வார்த்தைகளை அப்பிடியே மனசிலே வைச்சிருப்பேன்./
நானும் நீங்கள் எப்படி எல்லாம் என்னை வாரி விட்டீர்கள் என்பதை புள்ளி விபரங்களுடன் ஞாபகம் வைச்சு இருக்கேன்

Anonymous said...

உங்க கிட்ட மட்டும் அறிவுரை கேட்க மாட்டேன் இராம்.ஏற்கனவே நிறைய பேர் வரிசை நிற்கின்றார்கள்....போதும்ப்பா சாமி!!

இராம் சார் உங்களுக்குக் கல்யாணம் எல்லாம் ஆகி குழந்தை குட்டின்னு வந்தால் எப்படி சார் தனியாக இருக்க முடியும்?இல்லை எப்படியே பிரம்மச்சரியாக இருக்க போகின்றீர்களா?

Marutham said...

Vanakkam Raam,

Thangal pakathuku idhuvey mudhal murai... :)
Nandragavey ezhu uLLeergal!!
Padam - dhaan parkavey bayangaramaaga uladhu! :)
Matra padi tag-

Very interesting & nicely done! :)

Cheers!!

Santhosh said...

//வாப்பா சந்தோஷ்,

நான் புதரகம் வர்றோப்போ ஃபிளைட்குள்ளே நாயை விட்டு கடிக்கவிடுவேன்னு சொன்னது நீதானே????

இருக்கட்டும் இருக்கட்டும், ஒன்னையே ஆளு அடிக்கிறதுக்கு இப்போ பெரிய ஸ்கெட்ச் ஒன்னு போட்டுக்கிட்டு இருக்கேன். :)//
யப்பா அது போன வாரம். இது இந்த வாரம்.

இராம்/Raam said...

//ராம்ஸ், எனக்கு முன்னாடியே தெரியும் நீங்க பயங்கர வியர்ட் என்று...என்ன இருந்தாலும் ராமண்ணாவை நான் விட்டுகுடுக்க முடியுமா? ;)//


வாம்மா பாசமலரே,

ஹி ஹி நான் ஒரு பைத்தியமின்னு முன்னாடியே தெரியுமா???? அதை வெளியிலே சொல்லதே ஒன்னோட பாசத்தை நினைச்சி பார்த்தா.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


//[என்னில கோவம் இருந்தால் சொல்லி இருக்கலாம்..இப்படியா என்னை மாட்டிவிடுவது) //

நான் மட்டுந்தான் அப்பிடிபட்டவனா என்ன?? நம்ம பாசமலர் தங்கச்சியும் அப்பிடிதான்னு(weirdo) எல்லாருக்கும் தெரியவேணாமா??? :)

இராம்/Raam said...

//பயமா இருக்கு இராம் :( //

வாம்மா துர்க்கையம்மா???? கொஞ்சல்ஸ் ஆப் மருமகன் முடிச்சிருச்சா??? :)

//நானும் நீங்கள் எப்படி எல்லாம் என்னை வாரி விட்டீர்கள் என்பதை புள்ளி விபரங்களுடன் ஞாபகம் வைச்சு இருக்கேன்
//

ஹிஹி அதெல்லாம் நட்பென்னும் பாசத்திலே செஞ்சதும்மா? அதெய்யலாம் சீக்கிரமே மறந்துரு :)


//உங்க கிட்ட மட்டும் அறிவுரை கேட்க மாட்டேன் இராம்.ஏற்கனவே நிறைய பேர் வரிசை நிற்கின்றார்கள்....போதும்ப்பா சாமி!!//

ஹி ஹி எப்பிடியெல்லாம் சிந்திக்கிறிப்பா... ஒருத்தனை கவுத்துறதுக்கு????

//இராம் சார் உங்களுக்குக் கல்யாணம் எல்லாம் ஆகி குழந்தை குட்டின்னு வந்தால் எப்படி சார் தனியாக இருக்க முடியும்?இல்லை எப்படியே பிரம்மச்சரியாக இருக்க போகின்றீர்களா? //

குட் கொஸ்டின், கல்யாணத்துக்கப்புறம் தனிமை'கிறது போயிருங்கிறதே இங்கே இருக்கிற பல பேரை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்...... ஹிம் அதுதான் அந்த கொடுமைக்கு ஆளாகுறதுக்கு முன்னாடியே தனிமையெல்லாம் அனுபிச்சிக்கிறேன் :)))

மணிகண்டன் said...

நம்ம அணிய மெண்டலி ஸ்ட்ராங்கா ஆக்க பிசிசிஐ, நிமஹன்ஸ்ல இருந்து ஆள் எடுக்கறாங்களாம். வேணா இரை பண்ணி பாருங்களேன் :)

இராம்/Raam said...

//Vanakkam Raam,

Thangal pakathuku idhuvey mudhal murai... :)//

மருதம்,

செப்டம்பர் மாசம் நான் போட்ட போஸ்ட்லிலே இந்த கமெண்ட் போட்டதும் இன்னொரு போஸ்ட்லிலே இந்த கமெண்ட் போட்டதும் நீங்க இல்லியா???

வேற யாராவது பிராக்ஸி கொடுத்துட்டாங்களா????

//Nandragavey ezhu uLLeergal!! //

ஓ அப்பிடியா?? ரொம்ப நன்றிங்க உங்க பாரட்டுதலுக்கு :)

//Padam - dhaan parkavey bayangaramaaga uladhu! :)//

ஹிஹி life is swrewed up'ன்னு சொல்லுறது இல்லியா??? அதுதான் அந்த படத்தை போட்டேன்:)

//Matra padi tag-

Very interesting & nicely done! :)


Cheers!! //

thx buddy :)

Syam said...

//செப்டம்பர் மாசம் நான் போட்ட போஸ்ட்லிலே இந்த கமெண்ட் போட்டதும் இன்னொரு போஸ்ட்லிலே இந்த கமெண்ட் போட்டதும் நீங்க இல்லியா???//

என்ன ராயலு வந்தா வாங்க வாங்கனு சொல்றத விட்டுட்டு இப்படி ஆராச்சி பண்ணிட்டு இருக்கிங்க :-)

இலவசக்கொத்தனார் said...

நான் நாப்பதாவது பின்னூட்டம் போட்டலும் உங்களுக்குக் கோபம் வருமா?

இலவசக்கொத்தனார் said...

நியாயப் படி 40க்கு கோபம் வரக்கூடாது. 41ஆவதுக்குத்தான் வரணும்.

இலவசக்கொத்தனார் said...

இதுதான் அந்த 41!!!!

Marutham said...

Vandhrukena? :O

OMG!~!!

Enna en memory ipdi sothapiduchu :)
hm....Appo not my first visit! :) Sorry abt that....

Enna edho kindal panra maaaari..irukey!! Apdiya?? :>

உங்கள் நண்பன்(சரா) said...

ராயாலு எல்லோரும் மாதிரி நானும் உன்னைதிட்டியதற்க்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்! ஏன்ன்னா நான் இன்னும் திட்டவே ஆரம்பிக்கலை இனி திட்டவும் மாட்டேன்!

உன்னுடைய வாசிப்பு பழக்கம் சற்று என்னுடையதுபோன்றது! ஆனால் போப்பர் கேட்ட கொடுத்து வாங்கி படிப்பேன்!

//am from NIHANS//

உன்னிடம் பிடித்ததே இந்த உண்மை சொல்லும் பண்புதான்!

ஆமா நேற்றைய மூட் அவுட் சரிஆயாச்சா?

அன்புடன்...
சரவணன்.

இராம்/Raam said...

//யப்பா அது போன வாரம். இது இந்த வாரம்.//


இந்த வீரவசனத்தை நான் எங்கயோ கேட்டுருக்கேனே??? :)

இராம்/Raam said...

/என்ன ராயலு வந்தா வாங்க வாங்கனு சொல்றத விட்டுட்டு இப்படி ஆராச்சி பண்ணிட்டு இருக்கிங்க :-)//

ஹி ஹி :)))

இராம்/Raam said...

/நான் நாப்பதாவது பின்னூட்டம் போட்டலும் உங்களுக்குக் கோபம் வருமா?//


கொத்ஸ்,

இது என்ன ரிவெஞ்சா???? :)))

இராம்/Raam said...

//நியாயப் படி 40க்கு கோபம் வரக்கூடாது. 41ஆவதுக்குத்தான் வரணும்.//

நாங்கெல்லும் இதவே திரும்ப செய்யுவோமில்லே :)))

இராம்/Raam said...

//Vandhrukena? :O

OMG!~!!

Enna en memory ipdi sothapiduchu :)
hm....Appo not my first visit! :) Sorry abt that....//

மருதம்,

ஒன்னும் சொல்லுறதுக்கில்ல:))))

//Enna edho kindal panra maaaari..irukey!! Apdiya?? :>//

ஹி ஹி இன்னமும் அத ஆரம்பிக்கவே இல்லை :)

இராம்/Raam said...

//ராயாலு எல்லோரும் மாதிரி நானும் உன்னைதிட்டியதற்க்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்! ஏன்ன்னா நான் இன்னும் திட்டவே ஆரம்பிக்கலை இனி திட்டவும் மாட்டேன்!

உன்னுடைய வாசிப்பு பழக்கம் சற்று என்னுடையதுபோன்றது! ஆனால் பேப்பர் கேட்ட கொடுத்து வாங்கி படிப்பேன்!//

வாங்க சரா,

ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கத்துக்கு வந்திருக்கீங்க.... மிக்க நன்றி :)

பேப்பர் விஷயத்திலே நான் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவே மாட்டேன் :)

//உன்னிடம் பிடித்ததே இந்த உண்மை சொல்லும் பண்புதான்!///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

ராம் இந்த மறுமொழியை நான் save பண்ணி கொள்கின்றேன்
உங்களுக்கு வர போகும் வருங்கால மனைவிடம் இதைக் கண்டிப்பாக காட்ட வேண்டும் :))

இராம்/Raam said...

//நம்ம அணிய மெண்டலி ஸ்ட்ராங்கா ஆக்க பிசிசிஐ, நிமஹன்ஸ்ல இருந்து ஆள் எடுக்கறாங்களாம். வேணா இரை பண்ணி பாருங்களேன் :)//

மணி,

வாங்க முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி :)

அந்தமாதிரியெல்லாம் சொல்லி நம்ம நண்பர்களை அசிங்கப்படுத்தாதீங்க:((

ஏற்கெனவே நிம்ஹான்ஸ்'கிறே பெயரை யூஸ் பண்ணினதுக்கு திட்டு வாங்கியாச்சு :((

இராம்/Raam said...

//ராம் இந்த மறுமொழியை நான் save பண்ணி கொள்கின்றேன்
உங்களுக்கு வர போகும் வருங்கால மனைவிடம் இதைக் கண்டிப்பாக காட்ட வேண்டும் :))///

ஹி ஹி துர்கையம்மனே,

அப்புறம் என்ன ஒன்னுக்கு ரெண்டா அடி விழும் அவ்வளோதானே???

:)))

Anonymous said...

அடி வாங்க தயாரா?அப்படின்னா உங்களுக்கு கல்யாண களை வந்து விட்டது.சீக்கிரம் அடி வாங்க எனது வாழ்த்துக்கள்.இப்படி துர்க்கையம்மன் எல்லாம் கூப்பிட்டு என் மானத்தை வாங்குறதை நிறுத்துக்கின்றீர்களா?இது எல்லாம் சாமி குத்தமாகி அப்புறம் அடி ஒன்று இரண்டாக விழமால் 100 கணக்கில் விழும்!!

Marutham said...

Adadaaa...appo me stay away area'la unga page potranum :P

En kitta vendaam richie :P

Marutham said...

Ada aama..Vandhruken Vandhruken..
Andha rendumey ungala gnabagam vechukra mari post illa..One was guideline post - adhu yaaru potanu gnabagam vechukala.

Next one- Aala meratra dhigil post- //Aha.... :O Naan escpae- andha poto paarthadhumey enakku nadukkam edukka aramichachu...//Gnabagam irukum?!
So both post were not significant that THIS IS RAAM.. :) adhunala dhaan i had forgotten..
Btw, naney marandhuten appo nenega epdi gnabagam vechrukeenga..And ungala nama page pakkam adikadi pathrundha first time vara mari irundhrukaadhu! In any case... :) Mistake is mine-my memory!