Sunday, October 14, 2007

அதிரடி எழுத்தாளர் ஜி'யுடன் Gtalk உரையாடல்

வீட்டுலே நேத்து நைட்டு 2 மணி வாக்கிலே ஆபிஸ் வேலையை பார்த்துட்டு இருந்தோப்போ நம்ம நெல்லைசீமையின் சிங்கமான எழுத்து புயல் ஜி ஆன்லைனில் வந்தார். அவருடைய அருமை பெருமைகளை பத்தி சொல்லனுமின்னா அது கொஞ்சம் ஓவர்டோஸ்'ஆ இருக்கும், ஏன்னா அவரு தன்னடக்கத்தோட சுரங்கம், எழுத்துதிறமையோட அரங்கம் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரார். சமீபத்திலே கூட அவருடைய போட்டோ'வே பார்த்துட்டு பாலிவுட்,கோலிவுட்,சாண்டல்வுட்'ன்னு எல்லா வுட்'களுக்கும் ஹீரோவாக்குமின்னு கியூ கட்டி நிக்கப்போய் அவரு அதெல்லாம் வேணாவே வேணாம், நாமே இருக்கிற இருப்புக்கு ஹாலிவுட்'தான் குட்'ன்னு அமெரிக்கா வந்தவரு. அவரே நம்மக்கிட்டே வந்து பேசுனா அது எவ்வளவு பெரியமனசு, அப்பிடியே அந்த வரலாற்று சிறப்புமிக்க உரையாடலை பதிஞ்சுருக்கேன், படிச்சி பாருங்க.

ஜி:- "என்னங்க 2மணிக்கு ஆன்லைனிலே இருக்கீங்க? அவ்வளவு பெரிய கடலையா வறுத்துக்கிட்டு இருக்கீங்களா?"

நான்:- "ஹிம் ஒன்னத்துக்கும் வக்கிலாமே தான் நீங்க பிங் பண்ணினதும் உடனே ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன், ஏங்க சும்மா வெறுப்பேத்துறீங்க? என்ன ஜி பதிவெழுதியே ரொம்ப நாளாகி போச்சு? ஏன் மேல்மாடி இன்னமும் காலியா இருக்கு?"

ஜி:- "இல்ல இப்போ கொஞ்சமா நிறைஞ்சு தான் இருக்கு! அதுதான் நாளையிலிருந்து மறுபடியும் பதிவுலக வாழ்க்கையை தூசுதட்டி ஆரம்பிச்சிறலாமின்னு இருக்கேன். நான் ரீ-எண்ட்ரி கொடுக்கிறதுக்கு நல்ல ஐடியா'வா சொல்லுங்களேன்"

நான்:- "என்னது நான் ஒங்களுக்கு ஐடியா சொல்லவா? தன்னடக்கம் இருக்கவேண்டியதுதான், அதுக்காக இம்புட்டெல்லாம் இருக்கக்கூடாது சாமியோவ்! சரி வேணுமின்னா ஒன்னு பண்ணுங்க, இப்போதைக்கு ஆஸ்திரேலியா கூட மரண அடி வாங்குனாலும் அடுத்த மேட்ச்'லே செயிச்சுருவோமின்னு திரியுற கிரிக்கெட் ரசிகர்களை தாக்கி பதிவு போடுங்க, சும்மா கும்முன்னு ஹிட் ஆயிராலாம்."

ஜி:- "எப்பிடி கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாட்டா'ன்னா? அது ஏற்கெனவே எங்கயோ படிச்சிட்டேனே? வேற இன்னொன்னு பண்ணலாமா? இப்போதைக்கு ஒரு டீம்'ஐ திட்டி பதிவு போடுறதுக்கு தலைப்பு கண்டென்ட்'ன்னு ரெடி பண்ணி வைச்சிட்டு இந்த சீரியஸ் முடிச்சதும் போட்டுறலாமா?"

நான்:- "அப்பிடி கூட நம்ம மோகன்தாஸ் ரெடி பண்ணி வைச்சிட்டாருங்க, வேறமாதிரியா யோசிங்க, இப்போ நீங்க ரீ-எண்ட்ரி ஆனதும் எல்லாருக்கும் பத்திக்கனும், இன்னும் ரெண்டு மூணே வாரத்திலே ஜொலிச்சிறனும், அந்தமாதிரி எழுதப்பாருங்க"

ஜி:- "அவ்வ்வ்வ்வ்வ்வ், இவ்வளவெல்லாம் என்கிட்டே எதிர்பார்க்கீறீங்களா நீங்க? சீக்கிரமே ஜொலிக்க போற அளவுக்கெல்லாம் என்னத்தங்க நானெல்லாம் எழுதிட்டேன்?? இனிமேதான் அந்த அளவுக்கெல்லாம் எழுத முயற்சிக்கனும்!"

நான்:- "அடபாவி மக்கா நீயெல்லாம் இப்பிடி சொன்னா நானெல்லாம் என்னத்தையா சொல்லிக்கிறது? அதுவும் அறிவுஜீவிகளுக்கு மட்டுமே புரியுற அடர்த்தியான எழுத்துகள் வடிக்கவும், எங்களை மாதிரி சாதாரண வாசகர்களுக்கும் புரியுறமாதிரி எளிமையான நடையிலே எழுதி கலக்குற உங்களை மாதிரி நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் இப்பிடி சொன்னா நல்லாயிருக்குமா?"

ஜி:- "ஐயா சாமி என்னையெ வைச்சி நீங்க காமெடி கீமடி எதுவும் பண்ணலையே?"

நான்:- "நீங்கதான் வைகை புயல் வடிவேல் இல்லயே? ஒங்களை வெச்சி என்னத்த காமெடி பண்ணுறது? நீங்க பதிவுலகத்திலே பேமஸாக ஐடியா கேட்டீங்க, எனக்கு தெரிஞ்சத சொன்னேன் அம்புட்டுத்தேய்ன்!"

ஜி:- "அப்போ இன்னொன்னு பண்ணலாமா? ஆரம்பமே அதிரடியா நான் ஏன் ஸ்டார் ஆகவில்லை'ன்னு பதிவை போட்டு கலவரத்தை உண்டாக்கிவிட்டு அதிலே ஊர்வலமா வந்துறவா?"

நான்:- "ஹிம் நல்லாந்தான் யோசிக்கீறீங்க! ஆனா உங்களுக்குமுன்னாடியே இன்னொருத்தர் யோசிச்சு பதிவா போட்டுட்டாறே! இன்னும் பெட்டரா யோசிங்க, ஒங்களுக்கு இருக்கிற அளவிடவே முடியாத மூளையிலே கொஞ்சகாணு எடுத்து உபயோகப்படுத்தி பாருங்க, நல்லதொரு ஐடியா கிடைக்கும்... "

ஜி:- "ஆங் நல்ல ஐடியா அமெரிக்கா'விலே தமிழனுங்க சேட்டை'ன்னு சீரியஸா பதிவு போட்டுருவோம், நிலைமை கலவரமா போச்சின்னா உங்களை மாதிரி நான் அதை நகைச்சுவைக்காக எழுதின்னேன்னு சொல்லிக்கலாம்? எப்பிடி ஐடியா?"

நான்:- "யோவ் நான் உண்மையிலே ஜாலிக்காக தாய்யா அந்த பதிவே எழுதினேன்! நீ US'லே இருந்து இங்கன பெங்களூரூலே இருந்த அஞ்சாறு மாசத்திலே ஒன்னையே எத்தனை தடவை வாட்ச் பண்ணிருக்கேன், அந்த பதிவிலே இருக்கிறமாதிரியே எத்தனை தடவை நீ வென் ஐ வாஸ் யூ எஸ்'ன்னு பீலா விட்டுருப்பே? இப்போ அங்கன போனதும் டகால்டியா?"

ஜி:- "சரி சரி யாரும் பார்க்கலை, ஃபிரியா விடுங்க! இப்போ என்னந்தான் பண்ணுறது, கொஞ்சம் சீக்கிரமா எதாவது ஐடியா கொடுங்க!"

நான்:- "அப்போ இவர் கவனத்துக்கு அவர் கவனத்துக்கு'ன்னும் பதிவு போடுங்க, அதுவுமில்லான்னா எனக்கு கராத்தே தெரியும், குங்பூ தெரியும், அட்லிஸ்ட் குங்குமபூ போட்ட பால் குடிக்க தெரியுமின்னு வீடியோ எடுத்து பதிவா போட்டுருங்க!"

ஜி:- "ஆஹா இதுக்கூட நல்ல ஐடியா'வே இருக்கே? இதை டிரை பண்ணி பார்த்திறலாம்.."

நான்:- "ஒரு முக்கியமான விஷயம், அதிலே நீங்க சட்டை போடக்கூடாது, ஆனா கட்டாயமா கூலிங் கிளாஸ் மட்டும் போட்டுக்கனும்"

ஜி:- "Kewl, அப்பிடியே செஞ்சுறலாம், நாளைக்கே நான் ஒரு பதிவு போட்டுறேன்!"

நான்:- "நல்லது, இப்போ நாமே பேசினதை பதிவா போடப்போறேன்"

ஜி:- "ஹய்யோ, நாமே எவ்வளோ சீரியஸா'லாம் பேசிட்டு இருந்தோம், அதை பதிவா போட்டா என்னத்துக்கு ஆகிறது?

நான்:- "ஏய்யா வாளும் வேலும் என் இரு கண்கள்...போர்க்களம் என்பது இந்த ஜி-யின் பொழுதுபோக்கு... உறைந்த ரத்தம் நான் உறுஞ்சும் வாசம்...உருண்டோடும் தலைகள் நான் எட்டி விளையாடும் பந்துகள்'ன்னு புரொப்பலிலே போட்டு வைச்சிட்டு இதுக்கெல்லாம் கவலைபட்டா என்னத்துக்கய்யா ஆகுறது?? ஒரு வேளை இது சீரியஸா போச்சினா எல்லாரும் சொல்லுறமாதிரி நகைச்சுவைக்கு எழுதினதுன்னு சொல்லிக்கிறேன்! எப்பிடி என்னோட ஐடியா?"

ஜி:- "அது சரி எதோ ஒன்னு நடந்தா சரி!"

35 comments:

said...

me the firstuu.. :-))

said...

enna? comment pode mudiyala???

said...

எழுதணும்ன்னு வந்தவரை இப்படி கலாய்ச்சி திரும்ப ஓட வச்சிடுவீங்க போலிருக்கே???? ;-)

said...

இராம் சார் என்ன இது? நாங்க தான் நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் ஆரம்பிக்கப் போறம்ல. அப்புறம் ஏன் எல்லாருக்கும் அந்த ஐடியாவை குடுக்கிறீங்க.

said...

இந்த பதிவு ஜி'க்கு வைச்ச ஆப்பா? இல்ல இந்த வார ஸ்டார்'க்கு வைச்ச ஆப்பா?

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

எழுதணும்ன்னு வந்தவரை இப்படி கலாய்ச்சி திரும்ப ஓட வச்சிடுவீங்க போலிருக்கே???? ;-)/

சே... சே.... அதெல்லாம் நாமே பண்ணுவோமா??? :))

said...

// வித்யா கலைவாணி said...

இராம் சார் என்ன இது? நாங்க தான் நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் ஆரம்பிக்கப் போறம்ல. அப்புறம் ஏன் எல்லாருக்கும் அந்த ஐடியாவை குடுக்கிறீங்க.//

ஏன்'க்கா.... இன்னிக்குதான் நம்ம பசங்க தோத்து போனானுகளே? இன்னுமா கிரிக்கெட்...??? :((

said...

// டவுட் கேட்பவன் said...

இந்த பதிவு ஜி'க்கு வைச்ச ஆப்பா? இல்ல இந்த வார ஸ்டார்'க்கு வைச்ச ஆப்பா?//

யோவ் எந்த சேர்லே உட்கார்ந்துய்யா இப்பிடியெல்லாம் யோசிச்சு தொலையிறீங்க???? யாருக்கும் ஆப்பு இல்லன்னு சொன்ன நம்பி தொலைங்கய்யா.... :)

said...

இது யாருக்கு வச்ச ஆப்பு, ஜிக்கா,தனாமனாவுக்கா,ஸ்டாருக்கா???

said...

"நான்:- "ஹிம் ஒன்னத்துக்கும் வக்கிலாமே தான் நீங்க பிங் பண்ணினதும் உடனே ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன், ஏங்க சும்மா வெறுப்பேத்துறீங்க? "////

அப்ப பல நாள் நான் பிங் செஞ்சு ரிப்ளே வரமா இருந்ததுக்கு என்ன காரணம்? அப்ப ரொம்ப பிஸியோ கடலையில்!!!

ஹே ஹேய் வசமா மாட்டிக்கிட்டாருய்யா தல!!!

(தம்பி கதிர் எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டான்) அப்பா டா ஏதோ என்னால முடிஞ்சது:)

said...

நான்:- /// இன்னும் ரெண்டு மூணே வாரத்திலே ஜொலிச்சிறனும், அந்தமாதிரி எழுதப்பாருங்க"////

ஒரே மணி நேரத்தில் ஜொலிக்க ஒரு ஐடியா!!! சரவணா தங்க மாளிகைக்கு கூட்டிக்கிட்டு போய் நகைய மாட்டிவிடுங்க..அப்புறம் சினேகா மாதிரி ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதேன்னு பாட்டு பாடி டான்ஸ் ஆடுவார் நாம் எல்லாம் கண்ண மூடிக்கலாம் என்ன சரியா?

said...

/அபி அப்பா said...

இது யாருக்கு வச்ச ஆப்பு, ஜிக்கா,தனாமனாவுக்கா,ஸ்டாருக்கா???//

அண்ணே,

அம்புட்டு பெரிய ஆளுக்கெல்லாம் நான் லந்து பண்ணுவேனா? இது நம்ம ஜி'க்கு வைச்சதுதான்னு சொன்னா நம்புங்க பிளிஷ்...... :)

said...

/அப்ப பல நாள் நான் பிங் செஞ்சு ரிப்ளே வரமா இருந்ததுக்கு என்ன காரணம்? அப்ப ரொம்ப பிஸியோ கடலையில்!!!

ஹே ஹேய் வசமா மாட்டிக்கிட்டாருய்யா தல!!!

(தம்பி கதிர் எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டான்) அப்பா டா ஏதோ என்னால முடிஞ்சது:)///


ஹிக்கும்...... காமெடி பதிவையும் ஹைஜாக் பண்ணி சீரியஸ் ஆக்குற திறமை ஒங்கள மாதிரி ஆளுகளுக்குதாய்யா இருக்கு.... :(

நல்லாயிருங்க.....

said...

மதுரையில் சிலை வைக்கிறேன் என்று கொடுத்தவாக்கு எங்கே?:)))) எங்கே சிலை!!!

said...

:)))

said...

//ஒரே மணி நேரத்தில் ஜொலிக்க ஒரு ஐடியா!!! சரவணா தங்க மாளிகைக்கு கூட்டிக்கிட்டு போய் நகைய மாட்டிவிடுங்க..அப்புறம் சினேகா மாதிரி ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதேன்னு பாட்டு பாடி டான்ஸ் ஆடுவார் நாம் எல்லாம் கண்ண மூடிக்கலாம் என்ன சரியா?///


ஆஹா, எந்தெ பெத்த ஐடியா.... :))

said...

// சிலை கேட்பவன் said...

மதுரையில் சிலை வைக்கிறேன் என்று கொடுத்தவாக்கு எங்கே?:)))) எங்கே சிலை!!!///

கூடிய சீக்கிரத்திலே வைச்சிருவோம்மய்யா........ :))

said...

//நாகை சிவா said...

:)))//

ஏலேய் புலி, இவ்வளவு பெரிய போஸ்ட்'லே இம்புட்டுதான் கருத்து சொல்ல இருந்துச்சா???? :(((

said...

//ஜி:- "ஐயா சாமி என்னையெ வைச்சி நீங்க காமெடி கீமடி எதுவும் பண்ணலையே?"//

எல்லாரும் கவனிச்சிக்கோங்க.. இது காமெடியேதான்... இது காமெடிதான்...

அண்ணாச்சி... இம்புட்டு நல்லவரா நீங்க?? இந்த குத்து குத்திருக்கீங்க... :((((

said...

//எல்லாரும் கவனிச்சிக்கோங்க.. இது காமெடியேதான்... இது காமெடிதான்...

அண்ணாச்சி... இம்புட்டு நல்லவரா நீங்க?? இந்த குத்து குத்திருக்கீங்க... :((((///


இப்போ யாரு மேன் வந்து ஒன்கிட்டே தன்னிலை விளக்கம் கேட்டது???? :))

said...

ஹிஹிஹிஹிஹி.

said...

hmm

said...

//இராம்/Raam said...
/அப்ப பல நாள் நான் பிங் செஞ்சு ரிப்ளே வரமா இருந்ததுக்கு என்ன காரணம்? அப்ப ரொம்ப பிஸியோ கடலையில்!!!

ஹே ஹேய் வசமா மாட்டிக்கிட்டாருய்யா தல!!!

(தம்பி கதிர் எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டான்) அப்பா டா ஏதோ என்னால முடிஞ்சது:)///


ஹிக்கும்...... காமெடி பதிவையும் ஹைஜாக் பண்ணி சீரியஸ் ஆக்குற திறமை ஒங்கள மாதிரி ஆளுகளுக்குதாய்யா இருக்கு.... :(

நல்லாயிருங்க.....//

என்ன மேன் மலுப்புற பதிலா இருக்கு... ஒழுங்கா இதுக்கு பதில் சொல்லு மேன்... :))

said...

///எல்லாரும் கவனிச்சிக்கோங்க.. இது காமெடியேதான்... இது காமெடிதான்...///

இந்த போஸ்ட் நிஜமாலுமே காமெடி போஸ்ட் என்றால் நான் போட்ட முதல் பின்னூட்டம் சீரியஸ் பின்னூட்டம்.

இல்ல சீரியஸ் பதிவு என்றால் என் பின்னூட்டம் காமெடிக்கு...

கமெடின்னு சொன்னா என்கிட்ட மாட்டனும்..

சீரியஸ்ன்னு சொன்னா G கிட்ட மாட்டனும்.. எப்படி என் ஐடியா????

வாங்க மக்களே ஓடி வாங்க தல மாட்டிக்கிட்டார்!!!!

said...

சூப்பரு!!
ஜி பதிவு போடறாரோ இல்லையோ,நீங்க செமத்தியா ஃபார்ம்ல இருக்கீங்கன்னு தெள்ளத்தெளிவா தெரியுது!!
வாழ்த்துக்கள்!! :-D

said...

நல்ல பதிவு.
அருமையான கருத்துக்கள்
அப்புறமா படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்

said...

/அப்ப பல நாள் நான் பிங் செஞ்சு ரிப்ளே வரமா இருந்ததுக்கு என்ன காரணம்? அப்ப ரொம்ப பிஸியோ கடலையில்!!!

ஹே ஹேய் வசமா மாட்டிக்கிட்டாருய்யா தல!!!

(தம்பி கதிர் எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டான்) அப்பா டா ஏதோ என்னால முடிஞ்சது:)///

ரிப்பீட்டேய்

said...

//பூக்குட்டி said...

ஹிஹிஹிஹிஹி.//


முதன்முறை வருகைக்கு நன்றி பூக்குட்டி.... :)

said...

/ILA(a)இளா said...

hmm/

சிக்கன பின்னூட்டத்துக்கு சந்தோஷம் விவாஜி....

//என்ன மேன் மலுப்புற பதிலா இருக்கு... ஒழுங்கா இதுக்கு பதில் சொல்லு மேன்... :))//

ஹாஹா... ஜி என்ன காமெடி டிரை பண்ணுறீங்களா???? இன்னும் கொஞ்சம் பெட்டரா யோசிங்க.... :)

said...

/குசும்பன் said...

///எல்லாரும் கவனிச்சிக்கோங்க.. இது காமெடியேதான்... இது காமெடிதான்...///

இந்த போஸ்ட் நிஜமாலுமே காமெடி போஸ்ட் என்றால் நான் போட்ட முதல் பின்னூட்டம் சீரியஸ் பின்னூட்டம்.

இல்ல சீரியஸ் பதிவு என்றால் என் பின்னூட்டம் காமெடிக்கு...

கமெடின்னு சொன்னா என்கிட்ட மாட்டனும்..

சீரியஸ்ன்னு சொன்னா G கிட்ட மாட்டனும்.. எப்படி என் ஐடியா????

வாங்க மக்களே ஓடி வாங்க தல மாட்டிக்கிட்டார்!!!!//

குசும்பா,

இது காமெடியோ இல்ல சீரியஸோ அது அவங்க எடுத்துக்கிறதிலே தான் இருக்கு! ஒங்களுக்கு இதிலே சொல்லவந்தது அனேகமாக புரிஞ்சிருக்குமின்னு நினைக்கிறேன்.... இல்லைன்னா Please contact AIR.... :)

said...

//CVR said...

சூப்பரு!!
ஜி பதிவு போடறாரோ இல்லையோ,நீங்க செமத்தியா ஃபார்ம்ல இருக்கீங்கன்னு தெள்ளத்தெளிவா தெரியுது!!
வாழ்த்துக்கள்!! :-D//

நன்றி புரட்சி போட்டோகிராபர்.... :))


//கப்பி பய said...

:)))))))//

Grrrrrrrrr....... :((((

said...

//மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.
அருமையான கருத்துக்கள்
அப்புறமா படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்//

சிவா,

நல்லாதான் CAP technology யூஸ் பண்ணுறீங்க..... :))

அப்பிடியே இதெல்லாம் அபி அப்பா ஸ்டைலு.... :))

said...
This comment has been removed by a blog administrator.
said...

/அசிங்கமா எழுதினா பிடிக்காதவன்.//

அதை அங்க போயி சொல்லுய்யா..... எதுக்கு இங்கன தேவையில்லாத பிரச்சினைய கிளப்பி விடுறே????

said...

//சிங்கமான எழுத்து புயல் ஜி
தன்னடக்கத்தோட சுரங்கம்
எழுத்துதிறமையோட அரங்கம் //

நானும் வழிமொழிகிறேன் :D :D ஜின்னு சொன்னாலே அதிருதில்ல :D :D

இராம், உங்க ஆலோசனைலாம் சூப்பர் :D :D.. ஜி எதை ஃபாலோ பண்றார்னு பாப்போம்.. :D :D