Friday, June 6, 2008

கொஞ்சநாளைக்கு முன்னாடி.............

கொஞ்சநாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருந்தப்ப நம்ம சோட்டு பசங்க என்னோமோ இண்டர்நெட்'லே எழுதி கிழிக்கிறேன்னு பெருமையா பேசிட்டு திரிவியா? அப்பிடி என்னதாண்டா எழுதி தொலைப்பே.. எங்களுக்கு கொஞ்சம் காட்டி தொலையேன்னு விரும்பி கேட்டு கெஞ்சினதுனாலே நம்ம இதயதளபதி வருங்கால சூப்பர்ஸ்டார்(கிர்ர்ர்...தூ) நடித்த அழகிய தமிழ் மகன் திரைகாவியத்தோட விமர்சனத்தை காட்டினேன். வரிக்கு வரி படிச்சி என்னை முறைச்சிட்டே இருந்தானுக... இதை நீதான் எழுதுனியே! இது FWD-Mail'லிலே திரிஞ்சுச்சே, எல்லாம் ஒன்னோட வேலைதானா?'ன்னு கர்-புர்'னு ஆனானுக. அவனுக எல்லாம் மதுரை மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள்.. எந்த கழகம் தெரியுமா? (.....) விஜய் ரசிகர் போர் படை கழகம்... :(

குருவி வந்தப்போ கழகதங்கத்துக்களுக்கு போன் பண்ணி அ.த.ம'க்கு மாதிரி ஒரு விமர்சனம் எழுதவா'ன்னு கேட்டேன். நீ படம் பார்த்துட்டியா'னு திரும்ப கேட்டானுக.. இல்ல சும்மா ஒரு குத்து மதிப்பா ஒங்க தலைவர் எப்பிடிப்பட்ட கதை???யிலே நடிப்பாரோ, அதை வைச்சி எழுதுறேன்னு சொன்னேன். "நீ ஒன்னும் விமர்சனம் எழுதி நக்கல் பண்ண வேணாம்.. படமே அப்பிடிதான் இருக்குன்னு சொல்லிட்டானுக, அப்புறமென்னா தலைமை கழக நிர்வாகிகளே சொல்லியான்னு விட்டுட்டேன். இருந்தாலும் குருவி விமர்சனங்களிலே கப்பிநிலவனோட இந்த பின் - நவீனத்துவ பதிவும் கீர்த்தியோட செம நக்கல் பதிவும் FWD-Mail'லே திரிஞ்சுகிட்டு கிடந்துச்சு.

------------------------------------------------------------------------

கொஞ்சநாளைக்கு முன்னாடி என்னோட ஜீ-டாக் கஸ்டம் மெஜஜ்'லே ஒரு கவுஜ ஒன்னு போட்டுருந்தேன். நான் எழுதுனதுதான்.. ஹி ஹி நம்புங்க.

வானம் முடிந்து மரக்கிளை உதிர்க்கும் மழையென தாயன்பிலிருந்து உனது அன்பிற்கு...

ஆபிஸிலே கூட குப்பை கொட்டுற ஒருத்தன் படிச்சிட்டு இதுக்கு என்ன மீனிங்'னு கேட்டான். விளக்கி சொன்னதும் இவ்வளவுதானா'ன்னு போயிட்டான். அதுனாலே இன்னொரு கொலைவெறி கவுஜ எழுதியாக வேண்டிய கட்டாயத்துக்கு உந்தப்பட்டதுனாலே ஒன்னே ஒன்னு...

பெருவெளியின் காட்சியடைய சாளரம் வழியும் எரிதழலின் நிறமடைகிறது எனது அறை... உந்தன் முதன்முறை வருகையை போலே...

------------------------------------------------------------------------

கொஞ்சநாளைக்கு முன்னாடி வாங்குன Nikon - 40X'லே எடுத்த ஒரு படம்.------------------------------------------------------------------------

கட்டகடைசியா நானும் கொஞ்சநாளைக்கு முன்னாடி வலைபதிவரா இருந்தவன் தான்'கிறத காட்டிக்கிறதுக்கான "உள்ளேன் ஐயா'கிற மொக்கை பதிவு"கிற டிரெண்ட் பதிவு இதுதான் ஆணிதரமா சொல்லிக்கிறேன்... தெளிவா குழப்புறோமா.... நாங்கல்லாம் யாரு... :)

23 comments:

said...

சேர்க்கை சரியில்ல.. வேறென்ன சொல்ல :P

said...

//கொஞ்சநாளைக்கு முன்னாடி வாங்குன Nikon - 40X'லே எடுத்த ஒரு படம்.//

ஃப்ளாஷ் போடாம எடுத்திருந்தா சூப்பர் எஃபெக்ட் கிட்டியிருக்கும்.

இதுவும் ஓரளவுக்கு நல்லாத் தான் இருக்கு

said...

/
நானும் கொஞ்சநாளைக்கு முன்னாடி வலைபதிவரா இருந்தவன் தான்'கிறத காட்டிக்கிறதுக்கான "உள்ளேன் ஐயா'கிற மொக்கை பதிவு"கிற டிரெண்ட் பதிவு
/

ஓ இப்டிலாம் பண்ணனுமா?????

said...

நல்லா இருக்குண்ணா :))

said...

//G3 said...

சேர்க்கை சரியில்ல.. வேறென்ன சொல்ல :P//


சொர்ணாக்கா,


அந்த கழகத்து நிர்வாகிகளோட தொடர்ப்பை துண்டிச்சாச்சு... :)

said...

//ஃப்ளாஷ் போடாம எடுத்திருந்தா சூப்பர் எஃபெக்ட் கிட்டியிருக்கும்.//

ஹிம்..... Mode செலக்ட் ஆனத சரியா கவனிக்கல...

//இதுவும் ஓரளவுக்கு நல்லாத் தான் இருக்கு//

நன்னி...

said...

மங்களூர் சிவா said...

/
நானும் கொஞ்சநாளைக்கு முன்னாடி வலைபதிவரா இருந்தவன் தான்'கிறத காட்டிக்கிறதுக்கான "உள்ளேன் ஐயா'கிற மொக்கை பதிவு"கிற டிரெண்ட் பதிவு
/

ஓ இப்டிலாம் பண்ணனுமா?????//

பின்னே...!!!

said...

//ஆயில்யன் said...

நல்லா இருக்குண்ணா :))//

எதுங்கணா??? :)

said...

உள்ளேனய்யா!!

வாரவுக உள்ளேனய்யா போட்டா போதுமுன்னு தானே சொன்னீக?...

said...

அந்த புகழ்பெற்ற மரக்கிளை கவிதை படிச்சு ரொம்ப ரசிச்சேன்..அது நீங்க எழுதினதா சின்னத்தல தெரியாம போச்சே... நான் எங்கோ காப்பி பேஸ்ட்டினீங்களோன்னு நினைச்சேன்..அதுவிளக்காம புரிஞ்சுதுங்க.. இப்ப எழுதிய புதுகவிதைக்கு விளக்கம் மெயிலில் அனுப்பவும்.. :)

said...

:) விஜய் படத்துக்கு படம் வந்தப்புறம் விமர்சனம் எழுதுறதே எச்சகச்சம். படம் வர்ரதுக்கு முன்னாடியே தலைப்பை வெச்சே எழுதலாமே!

அந்தக் கவிதை நல்லா இருந்துச்சு. அது கவிதை இல்லை. நல்ல கவிதை. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

புதுக்கேமராவா? சூப்பரு. என்னைய ரெண்டு படம் பிடிக்கிறது!!! :D திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலைன்னு கூட்டீட்டுப் போயி.

said...

//பெருவெளியின் காட்சியடைய சாளரம் வழியும் எரிதழலின் நிறமடைகிறது எனது அறை... உந்தன் முதன்முறை வருகையை போலே... //

கவுஜ... கவுஜ...

அவுங்க மொதோ மொதோ ரூமுக்குள்ள வரசொல்லோ தலையும் காலும் புரியாம இப்படித்தான் இருந்தீகளா ராமுண்ணே :))

said...

//G3 said...
சேர்க்கை சரியில்ல.. வேறென்ன சொல்ல :P
//

ஹி..ஹி.. இதுக்கு மட்டுமாச்சும் ரிப்பீட்டே போட்டுக்கறேன் அண்ணே :))

said...

மெளலிகாரு,

நானு தாங்ஸ் செப்புஸ்தானு.... :)

said...

//அந்த புகழ்பெற்ற மரக்கிளை கவிதை படிச்சு ரொம்ப ரசிச்சேன்..அது நீங்க எழுதினதா//

ஆஹா.... இவ்வளவு சந்தேகமா??? நாங்கல்லாம் பிறவி கவுஜருக... :))

//சின்னத்தல தெரியாம போச்சே... நான் எங்கோ காப்பி பேஸ்ட்டினீங்களோன்னு நினைச்சேன்..//


கிரேட் இன்சல்ட்....... :(

//அதுவிளக்காம புரிஞ்சுதுங்க.. இப்ப எழுதிய புதுகவிதைக்கு விளக்கம் மெயிலில் அனுப்பவும்.. :)//

அனுப்பியாச்சு'க்கா... நல்லாயிருக்கான்னு சொல்லுங்க... :)

said...

//:) விஜய் படத்துக்கு படம் வந்தப்புறம் விமர்சனம் எழுதுறதே எச்சகச்சம். படம் வர்ரதுக்கு முன்னாடியே தலைப்பை வெச்சே எழுதலாமே!//


ஜிரா,

கூடிய சீக்கிரத்திலே "வில்"க்கு திரைகதை அப்புறம் விமர்சனம் எழுதுனும்.... :)

//அந்தக் கவிதை நல்லா இருந்துச்சு. அது கவிதை இல்லை. நல்ல கவிதை. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.//


நன்றி.... நன்றி..... :)

//புதுக்கேமராவா? சூப்பரு. என்னைய ரெண்டு படம் பிடிக்கிறது!!! :D திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலைன்னு கூட்டீட்டுப் போயி.///


வாங்க.... வாங்க.... நம்மூருக்கு எப்போ வந்தாலும் சரி அங்க இருக்குற எல்லா இடத்திலேயும் போயி போட்டோ எடுக்குறோம்.... :)

said...

சென்ஷி,

கவுஜன்னா அது நீ இன்னிக்கு அடிச்சு ஆடுன ஆட்டம்தாய்யா... :))

//
ஹி..ஹி.. இதுக்கு மட்டுமாச்சும் ரிப்பீட்டே போட்டுக்கறேன் அண்ணே :))//

ரீப்பிட்டே புகழ் கோபி வழிதோன்றல்..... :))

said...

மாப்பி இருக்கியா!!!

சந்தோஷம் ;)

said...

//அதுவிளக்காம புரிஞ்சுதுங்க.. இப்ப எழுதிய புதுகவிதைக்கு விளக்கம் மெயிலில் அனுப்பவும்.. :)//

ரிப்பீட்டு :)))


தலைப்புல ஒரு டவுட்டு..யாரைக் கொஞ்சற நாளுக்கு முன்னாடி?? :))

said...

கோபி,

இருக்கோம்'லே... :)

said...

KTM,

ஒனக்கு விளக்கம் நான் சொல்லனுமா??? என்ன கொடுமைய்யா இது?????

//தலைப்புல ஒரு டவுட்டு..யாரைக் கொஞ்சற நாளுக்கு முன்னாடி?? :))//

ஒன்னோட கேள்வியே புரியலையே இராசா.... :))

said...

//தெளிவா குழப்புறோமா.... நாங்கல்லாம் யாரு... :)//

ஆமா நீங்க யாரு??

said...

////தலைப்புல ஒரு டவுட்டு..யாரைக் கொஞ்சற நாளுக்கு முன்னாடி?? :))//

ஒன்னோட கேள்வியே புரியலையே இராசா.... :))//

எனக்கு பிரிஞ்சிடுச்சி...
:)